Don't Miss!
- News
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு குரங்கு அம்மை பரிசோதனை... விமான நிலையங்களுக்கு உத்தரவு
- Finance
ரூ.2,396 கோடி நட்டம்.. சில்லறை முதலீட்டாளர்களைப் பயமுறுத்திய பேடிஎம் காலாண்டு முடிவுகள்!
- Sports
அஸ்வின் கொடுத்த அதிர்ச்சி.. ஆடிப்போய் நின்ற தோனி.. ராஜஸ்தானிடம் சிஎஸ்கே தோற்றது எப்படி?
- Automobiles
ஆக்டிவாவை யாருமே அடிச்சிக்க முடியாது.. சமீபத்தில் சைலண்டா நடந்த சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டீர்களா?
- Technology
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி42: சாதனம் இப்படியும் இருக்கலாம்!
- Lifestyle
உடல் எடையை குறைக்கும்போது இரவு உணவிற்கு முட்டை அல்லது கோழி எடுத்துக்கொள்வது நல்லதா?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நிரூப்பின் கேப்டன்சி எப்படி...படுமோசம் என ஓப்பன் ஸ்டேட்மென்ட் தந்த நிரூப்
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 ன் 62 வது நாளில் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளார் கமல். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதும் நேரடியாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து, இன்றைய எபிசோட்டை தொகத்து வழங்கினார்.
மக்களின் அன்பிற்கு நன்றி சொன்ன கையோடு, இந்த சீசனில் அனைவரும் தனித்தனியாக விளையாடுகிறார் என போட்டியாளர்கள் பற்றி பாராட்டினார். ஒவ்வொருவரும் தனக்கென தனி யுக்தியை கையாண்டு வருவதாகவும் கமல் தெரிவித்தார்.

அண்ணாச்சி – நிரூப் மோதல்
பிக்பாஸ் வீட்டின் இந்த வாரம் கேப்டனாக நிரூப் இருந்து வருகிறார். இதில் பல விதமான சண்டைகள், பிரச்சனைகள் நடைபெற்றது. குறிப்பாக நிரூப், இமான் அண்ணாச்சி இடையே நடைபெற்ற மோதல்கள், காரசார வாக்குவாதங்கள் வாதங்கள் பற்றி ஹவுஸ்மேட்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக அமர்ந்து பேசி, விவாதித்தார்கள். அண்ணாச்சிக்கு ஆதரவாக வருண் பேசிதாகவும் பிரியங்கா போன்றவர்கள் குற்றம்சாட்டினர்.

நிரூப் கேப்டன்சி எப்படி
ஒரு வார இடைவெளிக்கு பிறகு மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த கமல், நிரூப்பின் கேப்டன்சி எப்படி இருந்தது என மற்ற போட்டியாளர்களிடம் கருத்து கேட்டார். இதற்கு அக்ஷரா, வழக்கமான நிரூப்பின் டாமினேட் இல்லை. எனக்கு ஒருநாள் கேப்டனாக இருக்கும் அதிகாரம் கொடுத்தார். எனக்கு அது பிடித்திருந்தது. நன்றாக இருந்தது என்றார்.

பாவமாக இருந்தார்
ஆனால் அடுத்து பேசிய தாமரையோ, நிரூப் இந்த வாரம் முழுவதும் குழப்பமாகவே இருந்தார். ஏதாவது செய் என நான் சொல்லிய போது கூட, எனக்கு குழப்பமாக இருக்கிறது என்று தான் சொன்னார். ஒரு வாரமாகவே பார்த்தாலே பாவப்படுவது போல் இருக்கிறான். என்னவென்றே தெரியவில்லை என்றார். அப்பொழுதும் எந்த ரியாக்ஷனும் காட்டாமல் தலையை குனிந்தபடி, சோகமாக அமர்ந்திருந்தார் நிரூப்.

சரியாக பண்ணவில்லை
இது பற்றி பிரியங்காவிடம் கமல் கருத்து கேட்ட போது, ஆரம்பத்தில் நன்றாக செய்தார். பிறகு அவனுக்கும் எனக்கும் நேருக்கு நேர் போட்டி வந்த போது, நீ உனக்காக விளையாடலாம். ஆனால் 12 பேருக்கும் சேர்த்தும் செய்தும் தகுதி உனக்கு கிடையாது என்றேன். அந்த விஷயத்தில் அவர் சரியாக பண்ணவில்லை என்று தான் நான் நினைக்கிறேன் சார் என்றார்.

மோசமான கேப்டன்சி
கடைசியாக நிரூப்பிடம் அவரின் கேப்டன்சி பற்றி கேட்டார் கமல். அதற்கு பதிலளித்த நிரூப், கேப்டன்சி ஆரம்பிக்கும் போதே நிறைய கருத்து வேறுபாடுகள், பிரச்சனைகள் இருந்தது. நான் புதிதாக ஒன்று பண்ணலாம் என நினைத்தேன். ஆனால் கடந்த வார பிரச்சனைகளே மனதில் இருந்தது. என்னை பொருத்தவரை பிக்பாஸின் இந்த சீசனிலேயே மோசமான கேப்டன்சி.

டல்லாக இருந்தேன்
கடந்த வார பிரச்சனைகள், சண்டை எல்லாம் சேர்த்து என் மனதை ஏதோ செய்து விட்டது. என்னால் எனது 100 சதவீத பங்களிப்பை அளிக்க முடியவில்லை என்பதை உறுதியாக சொல்வேன். நாமினேஷனின் போதே டல்லாகி விட்டேன் என்றார் நிரூப்.