கட்டிப்பிடிக்க முடியலியே...யாஷிகாவிடம் ரொமான்சாக காதலை சொன்ன நிரூப்

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இன்று 80 வது நாளை எட்டி உள்ளது. நிகழ்ச்சியின் பனிரெண்டாவது வாரமான இதில், போட்டியாளர்களின் குடும்ப உறவுகள் வரும் ஃபிரீஸ் டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. இதனை ரசிகர்கள் ஆவலுடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

இதுவரை அக்ஷரா, நிரூப், ராஜு, சிபி ஆகியோரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வந்துள்ளனர். குடும்ப உறவினர்களின் வருகைக்கு பிறகு பலரை பற்றிய பலரின் கண்ணோட்டங்கள், கருத்துக்கள் மாறி உள்ளனர். இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில் அடுத்து என்ன நடக்க போகிறது, அடுத்து யாருடைய குடும்பத்தினர்கள் வர போகிறார்கள் என்பதை பார்ப்பதற்கு அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.

பிக்பாசிற்கு வந்த யாஷிகா

பிக்பாசிற்கு வந்த யாஷிகா

ஏற்கனவே நிரூப்பின் தந்தை வந்து விட்டு சென்ற நிலையில், இன்று நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே நடிகையும், முந்தைய பிக்பாஸ் போட்டியாளரும், நிரூப்பின் நெருங்கிய தோழியுமான யாஷிகா ஆனந்த் வீட்டிற்குள் வந்திருந்தார். கண்ணாடிக்கு பின்னால் நின்று பேசிய யாஷிகாவை ஓடி வந்து கண்ணாடியில் கை வைத்து, உணர்ச்சிவசப்பட்டு பேசினார் நிரூப்.

எப்படி பாப்பா இருக்க

எப்படி பாப்பா இருக்க

யாஷிகா போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக விசாரித்துக் கொண்டிருக்க, நிரூப்போ, நீ எப்படி பாப்பா இருக்க. எப்போ வந்தாய் என கேட்கிறார். அதற்கு யாஷிகா, நான் நன்றாக இருக்கிறேன். என்னால் நடக்க முடிகிறது. இன்னும் மூன்று வாரங்கள் தான் இருக்கிறது. எல்லோரும் ஸ்டிராங்காக நன்றாக விளையாடுகிறீர்கள். தொடர்ந்து நன்றாக விளையாடுங்கள். வெளியே வந்த பிறகு வேற லெவல் என சொல்கிறார்.

கடமையை செய் முடிந்தது

கடமையை செய் முடிந்தது

இத்தனை நடந்த பிறகும் தைரியமாக மீண்டு வந்துள்ளாய். நீ தான் ஸ்டிராங் கேர்ள் னெ பாராட்டுகிறார் பிரியங்கா. பிறகு நிரூப், யாஷிகாவை தனியாக பேச விட்டு மற்ற போட்டியாளர்கள் வீட்டிற்குள் செல்கின்றனர். அப்போது யாஷிகாவிடம் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய் என கேட்கிறார். அதற்கு யாஷிகா, கடமையை செய் படம் முடிந்தது. அடுத்த படங்களின் வேலைகளை இனி தான் துவக்க வேண்டும் என்கிறார்.

நான் பார்த்துக் கொள்கிறேன்

நான் பார்த்துக் கொள்கிறேன்

பிக்பாஸ் ஷோவிற்கு வர வேண்டாம் என நினைத்தேன். ஆனால் உனக்காக தான் வந்தேன். நீ இத்தனை நாட்கள் இருந்ததே பெரிய விஷயம். வெளியே வா நீ விரும்பிய நல்ல வாழ்க்கை காத்திருக்கிறது என்ற யாஷிகாவிடம், ரொமான்டிக் லுக்குடன் நான் உன்னை பார்த்துக் கொள்கிறேன் என்கிறார் நிரூப், அதற்கு பிக்பாஸ் யாஷிகாவை வெளியே வரும் படி அழைக்கிறார் பிக்பாஸ். ஆனால் போக வேண்டாம் என்கிறார் நிரூப்.

லவ்வை சொன்ன நிரூப்

லவ்வை சொன்ன நிரூப்

ஐ லவ் யூ பாப்பா என காதலை சொல்லி கண்ணாடி வழியாக முத்தமிட்டார் நிரூப். ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும் நிரூப்பிடம், யாஷிகாவும் காதலை சொல்கிறார். இருவருக்கும் இடையேயான காதல் ரசிக்கும் படி இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

என்னால் நடக்க முடிகிறது

என்னால் நடக்க முடிகிறது

பாப்பா...பாப்பா என யாஷிகா நிரூப் கூப்பிட்டதை அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர். கோபத்தை குறைத்துக் கொள் என நிரூப்பிடம் சொல்கிறார் யாஷிகா. கண்ணாடி வழியாகவே இருவரும் முத்தமிட்டு கொள்கிறார்கள். தொடை தெரியும் அளவிற்கு யாஷிகா உடை அணிந்து வந்து பேசியதுடன், என்னால் நிற்க முடிகிறது. நடக்க முடிகிறது என நிரூப்பிடம் சந்தோஷமாக கூறுகிறார்.

கட்டிப்பிடிக்க முடியலியே

கட்டிப்பிடிக்க முடியலியே

யாஷிகா சென்ற பிறகு, மற்ற போட்டியாளர்கள் நிரூப்பை கிண்டல் செய்து விளையாடுகிறார்கள். தாமரை உள்ளிட்ட மற்றவர்கள் பாப்பாவா...இத்தனை நாளாக எங்கடா வைத்திருந்தார் என கேட்டு செல்லமாக அடித்து விளையாடுகிறார்கள். அவர்களிடம், கட்டிப்பிடிக்க முடியவில்லையே அது தான் கஷ்டமாக இருக்கிறது என்றார் நிரூப். பாத்ரூம் ஏரியாவிற்கு சென்று யாஷிகா வந்த சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறார் நிரூப்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X