பிரியங்கா பண்ண அந்த காரியம்.. உச்சகட்ட ஆதங்கத்தில் நிரூப்.. ஒவ்வொரு கேள்வியும் அனல் பறக்குது!

சென்னை: தாமரையிடம் நான் வின் பண்ண தான் விளையாடுறேன் உனக்கு அந்த விருப்பம் இல்லையா? என அந்த கேள்வி கேட்ட பிரியங்கா ராஜுவின் ஸ்ட்ராட்டஜியை காப்பி அடித்து தன் கட் அவுட் மேலே தானே முட்டைகளை வீச ஆரம்பித்தார்.

பிரியங்கா கேமில் இருந்து திடீரென ஏன் இப்படி பின் வாங்குகிறார் என புரியாமல் போன நிரூப் அனல் பறக்கும் கேள்விகளால் பிரியங்காவிடம் வாக்குவாதம் செய்தது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

கொஞ்சம் கொஞ்சமாக மூன்றாவது இடத்துக்கு ஓட்டுக்களை பெற்று முன்னேறும் நிரூப் இரண்டாவது இடத்துக்கு முன்னேறும் யுக்தியை சரியாக செய்து வருகிறார் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

போலியான விளையாட்டு

போலியான விளையாட்டு

ஆரம்பத்தில் சரியாக சென்று கொண்டிருந்த போட்டி பிரியங்காவின் தேவை இல்லாத இடை மறித்தல் பேச்சு காரணமாக அப்படியே வேற ஒரு ரூட்டை பிடித்துக் கொண்டு சென்றது. தனது கட் அவுட்டில் தானே பெயின்ட் முட்டையை ராஜு அடித்து விளையாடிய ஆட்டத்தை பிரியங்காவும் தொடர கேமே ஸ்பாயில் ஆனது.

ஆதங்கப்பட்ட நிரூப்

ஆதங்கப்பட்ட நிரூப்

இப்படித்தான் விளையாடி வெளியேற போகிறீர்கள் என்றால் என்னை ஏன் முதலிலேயே வெளியே அனுப்புனீங்க என தனது உச்சகட்ட ஆதங்கத்தை நிரூப் பிரியங்காவிடம் வெளிப்படுத்தி கேள்விகளால் துளைத்து எடுத்து விட்டார்.

உன் கூட விளையாட முடியாது

உன் கூட விளையாட முடியாது

பிசிக்கல் டாஸ்க் தான் நடக்கும் உன் கூட என்னால் விளையாட முடியாது. நிரூப் ஸ்ட்ராங் பிளேயர் என ஆரம்பத்திலேயே என்னை ஏன் காலி பண்ணீங்க இப்போ நான் இருந்திருந்தா விளையாடி ஜெயிச்சுருப்பேன்ல என பிரியங்கா சொன்ன வார்த்தைகளை வைத்தே அவரை மடக்கி விட்டார் நிரூப்.

ஃபேக் பிரியங்கா

ஃபேக் பிரியங்கா

பிக் பாஸ் போட்டியில் யார் ஜெயிக்கவே கூடாது என நினைக்கிறீங்க என்கிற கேள்வியை கடைசியாக பிக் பாஸ் கேட்ட நிலையில், ராஜு மற்றும் பிரியங்கா தங்கள் கட் அவுட்களை தாங்களே அடித்துக் கொண்டு போட்டியில் இருந்து வெளியேறினார்கள். பிரியங்காவிடம் வாக்குவாதம் செய்த நிரூப் பிக் பாஸ் கேட்ட கேள்விக்கு நீ உண்மையாக இல்லை என பிரியங்காவை ஃபேக் பிரியங்கா என தெளிவாக முத்திரை குத்தி உள்ளார்.

Recommended Video

#BiggBoss5 டைட்டிலை கைப்பற்ற எல்லோரும் நடிக்கிறாங்க… போட்டுடைத்த போட்டியாளர்கள்!
கடைசியில் வந்தவர்கள்

கடைசியில் வந்தவர்கள்

ஆரம்பத்தில் இருந்தே பிக் பாஸ் வீட்டுக்குள் கடும் போட்டிகளை சந்தித்து வரும் நிரூப், பாவனி, தாமரையை முன்னதாக வெளியேற்றி விட்டு தற்போது பிரியங்கா மற்றும் ராஜு வெளியேறி டிக்கெட் டு ஃபினாலேவை கடைசியாக வந்த அமீர் அல்லது சஞ்சீவ் கைகளுக்கு கிடைக்க விடும் படி ஆடுவது ஃபேர் கேமா என மறைமுகமாக கேட்கும் நிரூப்பின் ஆதங்கம் நியாயமானது தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X