பாவம் சஞ்சீவ்...காயின் பவரால் நாமினேஷனில் இருந்து தப்பிய நிரூப்
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 10 வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 8 பேர் எவிக்ஷன் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ரசிகர்களின் கடும் எதிர்ப்புக்களுடன் இரண்டாவது முறையாக பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் அபிஷேக். இந்நிலையில் இந்த வார நிகழ்ச்சி எப்படி இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்க துவங்கி விட்டனர்.

வீணாய் போன அமீரின் வெற்றி
இந்நிலையில் நிகழ்ச்சியின் 64 வது நாளான இன்று சுத்தி சுத்தி வந்தீங்க கேட்ன்சி டாஸ்க் நடத்தப்பட்டது. இதில் கடுமையாக கடைசி வரை போராடி நாற்காலியை கைப்பற்றினார் அமீர். அக்ஷரா கெஞ்சிக் கேட்டும் அவர் விட்டு தர மறுத்தார். கடைசியாக இந்த வார கேப்டன்சி டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமீருக்கு பிக்பாஸ் வாழ்த்தும் தெரிவித்தார்.

அதிர்ச்சியில் அமீர்
பத்தாவது வாரத்துடன் காயினுக்கான பவர் முடிந்து விடும் என்பதால், தன்னிடம் உள்ள காயின் பவரை பயன்படுத்துவதாக சொல்கிறார் பாவ்னி. காயின் பவரை பயன்படுத்தி அமீரின் தலைவர் பதவியை தட்டி பறிக்கிறார். வெற்றி பெற்றதும் முதல் ஆளாக வந்து வாழ்த்திய பாவ்னி, இப்படி செய்து விட்டாரே என சற்றே அதிர்ச்சியானார் அமீர்.

பாவ்னி – அக்ஷரா மோதல்
இதைத் தொடர்ந்து காயின் பவரை பயன்படுத்தியதற்கு தண்டனையாக வீட்டில் உள்ள பெண்களின் உதவியாளராக இருக்க வேண்டும் என பாவ்னிக்கு உத்தரவிட்டார் பிக்பாஸ். இதை வைத்து பாவ்னியை கிண்டல் செய்கிறார் அக்ஷரா. இதனால் டென்ஷன் ஆகும் பாவ்னி, உங்களுக்கு உதவியாளராக தான் இருக்க சொல்லி இருக்கார். அதற்காக உங்களுக்காக ஒதுக்கப்பட்ட வேலையை என்னிடம் சுமத்தாதீர்கள் என சொல்ல, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது.

சஞ்சீவை சிக்க வைத்த நிரூப்
இந்த வார நாமினேஷன் ப்ராசசில் அபினய், சிபி, நிரூப், அக்ஷரா, இமான் அண்ணாச்சி, தாமரை ஆகியோர் நாமினேட் செய்யப்படுகிறார்கள். உங்களிடம் உள்ள காயினை பயன்படுத்தி நாமினேஷனில் இருந்து தப்பிக்க விரும்புகிறீர்களா என நிரூப்பிடம் கேட்கிறார் பிக்பாஸ். தனது காயின் பவரை பயன்படுத்துவதாகவும், தனக்கு பதில் சஞ்சீவை நாமினேட் செய்வதாக சொல்கிறார் நிரூப்.

தப்பிக்க நடந்த போட்டி
அப்படியானால் உங்களுக்கும் சஞ்சீவிற்கும் ஒரு போட்டி நடத்தப்படும். அதில் நீங்கள் வெற்றி பெறும் பட்சத்தில் உங்களை நாமினேஷனில் இருந்து காப்பாற்றிக் கொள்ள முடியும். இந்த போட்டி பற்றி விரைவில் தெரிவிக்கப்படும் என்கிறார் பிக்பாஸ்.


Click it and Unblock the Notifications











