நாள் ஜெயிலுக்கு போறேன்..ஜெயிலுக்கு போறேன்...முதல் ஆளாக ஜெயிலுக்கு போன நிரூப்
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இரண்டு வாரங்களை நிறைவு செய்து, மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இதில் மூன்றாவது வாரத்தின் துவக்கத்தில், 15வது நாளில் இந்த வாரத்திற்கான தலைவரை தேர்வு செய்யும் போட்டி நடத்தப்பட்டது.
இதில் கடும் போட்டிக்கு பிறகு சிபி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து நடத்தப்பட்ட இந்த வாரத்திற்கான நாமினேஷனில் 9 பேர் நாமினேட் ஆகி உள்ளனர். அபிஷேக், பாவனி, அக்ஷரா, சின்ன பொண்ணு, பிரியங்கா, தாமரை செல்வி, ஐக்கி, இசைவாணி, அபினய் ஆகியோர் எவிக்ஷனுக்காக நாமினேட் ஆகி உள்ளனர்.
Recommended Video

லக்சுரி பட்ஜெட் டாஸ்க்
இந்நிலையில் 16 வது நாளான நேற்று புதிய லக்சுரி பட்ஜெட் டாஸ்ட் அறிவிக்கப்பட்டது. இதில் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் பஞ்ச பூதங்களின் பெயர்கள் குறிப்பிட்ட 5 நாணயங்களை யாருக்கும் தெரியாமல் கைப்பற்ற வேண்டும். அப்படி நாணயத்தை எடுக்கும் போது யாராவது பார்த்து விட்டால், நாணயத்தை எடுத்தவர் உடனடியாக பாதாள சிறைக்கு அனுப்பப்படுவார்.

நாமினேஷனிலிருந்து தப்பிக்கலாம்
இந்த டாஸ்க் மறு அறிவிப்பு வரும் வரை தொடரும். ஒருவர் கைப்பற்றிய நாணயத்தை அவருக்கு தெரியாமல் மற்றவர் எடுத்துக் கொள்ளலாம். போட்டியின் முடிவில் யாரிடம் அதிக நாணயங்கள் உள்ளதோ அவரே வெற்றி பெற்றவர். அவர் நாமினேஷனில் இருந்தால், அதை வைத்து தன்னையோ அல்லது நாமினேஷனில் இருக்கும் வேறு ஒருவரையோ காப்பாற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிரூப்பை பிடித்த அபினவ்
இதில் நாயணங்களை ஒருவர் திருடுவதும், அதை மற்றொருவர் கைப்பற்றுவதும் என நேற்றைய எபிசோட் ஜாலியாக சென்றது. அதில் பாவனி மறைத்து வைத்திருந்த நாணயத்தை நிரூப் எடுக்கும் போது, அபினய் பார்த்து விட்டு சத்தம் போடுகிறார். இதை நிரூப் ஏற்க மறுத்து. தன்னிடம் இரண்டு நாணயங்கள் இருப்பதாக கேமிரா முன் காட்டுகிறார்.

நான் ஜெயிலுக்கு போறேன்
ஆனால் நிரூப்பை பாதாள சிறையில் அடைக்கும்படி பிக்பாஸ், வீட்டின் தலைவர் சிபியிடம் சொல்கிறார். அப்போது சிறைக்கு செல்வதற்கு முன் நிரூப், நான் ஜெயிலுக்கு போறேன். ஜெயிலுக்கு போறேன். ஜெயிலுக்கு போற முதல் ஆள் நான் தான். அந்த ரூமை விட ஜெயில் சூப்பரா இருக்கு. நான் இங்கேயே செட்டில் ஆகிவிடுறேன் என்கிறார்.

நேர்மையா விளையாடுங்க
பிறகு மற்றவர்களிடம் ஒழுங்காக, நேர்மையாக விளையாடுங்கள். இல்லா விட்டால் கடுப்பாகி விடுவேன் என எச்சரிக்கிறார். பிக்பாஸ் கூறியபடி, நிரூப் கைப்பற்றிய நாணயங்களை மீண்டும் அதே இடத்தில் வைக்கிறார் சிபி. கார்டன் ஏரியாவில் உள்ள நாணயத்தை கைப்பற்ற தாமரை, இசைவாணி, சின்ன பொண்ணு, மதுமிதா ஆகியோர் நாணயத்தை எடுப்பதற்காக இரவு முழுவதும், அதை சுற்றி அமர்ந்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











