»   »  பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லையைச் சொல்லும் நிசப்தம்!

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லையைச் சொல்லும் நிசப்தம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நேற்று வெளியான நிசப்தம் படம் சத்தமின்றி ஏகப்பட்ட பாராட்டுகளைக் குவித்து வருகிறது. படத்தைப் பார்த்த அத்தனைப் பேரும், ஒவ்வொரு பெற்றோரும் கட்டாயம் பார்த்தாக வேண்டிய படம் எனப் பாராட்டுகிறார்கள்.

பெங்களூரில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் மைக்கேல் அருண்.

Nisabtham gets good mouth talk

பெங்களூரில் வசிக்கும் ஒரு தம்பதியின் எட்டு வயது மகளை ஒரு குடிகாரன் சீரழிக்கிறான். அந்த குழந்தை இந்த சமூகத்தில் படும் பாடு, அந்தக் குழந்தையின் பெற்றோர் படும் பாடுகளை இத்தனை அழுத்தமாக வேறு எந்தப் படமும் சொன்னதில்லை. குறிப்பாக தமிழில் இப்படி ஒரு வந்ததே இல்லை என்று பாராட்டும் அளவுக்கு சிறப்பாக வந்துள்ளது நிசப்தம் படம்.

பாதிக்கப்பட்ட சிறுமியாக சாதன்யா நடித்துள்ளார். அஜய் - அபிநயா ஜோடியாக நடித்துள்ளனர்.

பெரிய பரபரப்பு, விளம்பரங்கள் இல்லாமல் வெளியாகியுள்ள இந்தப் படம், மவுத் டாக் காரணமாக பிக்கப்பாகத் தொடங்கியுள்ளது.

English summary
Nisabtham movie is getting good mouth talk after release due to its content and making

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil