For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கையெடுத்துக் கும்பிட்ட ரியோ, சோம்.. ஆரி படுத்தே விட்டார்.. ஜித்தனும் நிஷாவும் அப்படி பேசுனாங்க!

  |

  சென்னை: அனிதா சம்பத் கணித்தபடியே நிஷாவுக்குத் தான் ஜித்தன் ரமேஷ் கால் பண்ணி பேசினார்.

  போன் பண்ணி பேசிய அவர், பாட்டு பாடுங்க நிஷா என்றதும், தூதுவலை இலை அரைச்சின்னு நிஷாவும் வெட்கமே இல்லாமல் பாடினாங்க, உடனே ரியோவும், சோமும் எழுந்து வந்து கும்பிடு போட்டாங்க..

  ஆரி எல்லாம் படுத்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்து விட்டார்.

  கணித்த அனிதா

  கணித்த அனிதா

  ஜித்தன் ரமேஷ் நிஷாவுக்குத் தான் போன் பண்ணுவார். அப்போ தான் அவர் அடுத்த வாரமும் நாமினேட் ஆகாமல் தப்பிப்பார். இந்த வாரம் தலைவராகி எஸ்கேப் ஆகிட்டார் என சீக்கிரமே தான் வெளியேறிவிடுவேன் என்கிற வயிற்றெரிச்சலில் புலம்பி தள்ளினார். அதே போலத்தான் ஜித்தன் நிஷாவுக்கு கால் பண்ணார்.

  சூர மொக்கை

  சூர மொக்கை

  நிஷாவும் ஜித்தன் ரமேஷும், வீட்டுக்குள்ள கொஞ்சி பேசி அரட்டை அடிப்பதே தாங்க முடியவில்லை. இதில், லக்சரி பட்ஜெட் டாஸ்க்கில் இப்படி சூர மொக்கைப் போடுவதை பார்த்த ரசிகர்கள், செம போர் டா.. தயவு செஞ்சு இதையெல்லாம் அன்சீன்ல வச்சிருக்கலாம் என பிக் பாஸ் டீமை திட்டி வருகின்றனர்.

  ஆஜீத் மூஞ்சி மாறிடுச்சு

  ஆஜீத் மூஞ்சி மாறிடுச்சு

  ஜித்தன் ரமேஷ் நிஷாவுக்கு போன் பண்ணி பேசும் போது, ஆஜீத்திடம் இருந்து எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸை பிடுங்கிக் கொடுத்த அந்த பழைய மரத்து கதையை பேச, உடனே சோபாவில் படுத்துக் கொண்டிருந்த ஆஜீத்தின் முகம் அப்படியே மாறிப் போனது. இன்னுமா அதை ஜித்தன் பேசுறார் என்று ரசிகர்களும் அப்செட் ஆனார்கள்.

  ஜித்தனின் அந்த ஆசை

  ஜித்தனின் அந்த ஆசை

  நிஷா, ஜித்தன் ரமேஷ், ரியோ மூன்று பேரும் ஃபைனலுக்கு போயிட்டோம் என ஜித்தன் சொல்லும் போதே நிஷா சிரித்து விட்டார். பாலாவின் முகம் அப்படியே சுருங்கிப் போனது. அப்போ, யாரையாவது ஒருத்தரை நீங்க நாமினேட் பண்ணனும் யாரை பண்ணுவீங்க என்றதும், ரமேஷை தான் என்றார் நிஷா. அப்பவும் தம்பி ரியோவை நாமினேட் பண்ண மாட்டீங்க என்று கலாய்த்தார்.

  கையெடுத்துக் கும்பிட்ட ரியோ

  கையெடுத்துக் கும்பிட்ட ரியோ

  இந்த கொடுமை எல்லாம் போதாதுன்னு நிஷாவை ஒரு பாட்டு பாடுங்களேன் என பெப்சி உமாவின் உங்கள் சாய்ஸ்க்கு போன் பண்ணது மாதிரி ரமேஷ் கேட்க ஆரம்பித்து விட்டார். இப்படி மொக்கையா விளையாடுறவங்களை எல்லாம் இன்னும் ஏன் பிக் பாஸ் வீட்டில் வச்சிருக்கீங்கன்னே தெரியல என ரசிகர்கள் டென்ஷன் ஆகி உள்ளனர். நிஷாவும் வெட்கமே இல்லாமல், தூதுவலை இலை அரைச்சின்னு பாடினாங்க , உடனே ரியோவும், சோமும் எழுந்து வந்து கும்பிடு போட்டது ரசிக்கும் படியாக இருந்தது.

  ஆரி படுத்தே விட்டார்

  ஆரி படுத்தே விட்டார்

  நிஷாவும் ஜித்தனும் பண்ணும் ரகளையை பார்த்து சிரிப்புத் தாங்க முடியாமல், கீழே படுத்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தார் ஆரி. அதன் பிறகு, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள யோகா எல்லாம் செய்தது ரசிகர்களை சிரிக்க வைத்து விட்டது. நிஷா காமெடிக்கு இந்த காமெடி பரவாயில்லை என்பது போல அந்த சீன் ஓடியது.

  ஊட்டிவிட்ட ஷிவானி

  ஊட்டிவிட்ட ஷிவானி

  சோபாவில் அமர்ந்து கொண்டு, ஜித்தன் ரமேஷ், நிஷா பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த பாலாவுக்கு, ஷிவானி பழங்களை எடுத்து ஊட்டி விட்டுக் கொண்டிருந்தார். என்னடா நடக்குது அங்க என்பது போல நெட்டிசன்கள், பாலாவையும் ஷிவானியையும் தனியாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

  நீங்க தோற்கக் கூடாது

  நீங்க தோற்கக் கூடாது

  இருவரும் மாற்றி மாற்றி மொக்கைப் போட்டுக் கொண்டிருந்த நிலையில், உடனே நிஷா, சினிமா வாழ்க்கையில் தோற்றது போல, பிக் பாஸிலும் நீங்க தோற்கக் கூடாது, அதனால் நானே போனை கட் பண்றேன் என சொல்லி விட்டு, போனை வைத்து விட்டார். ஜித்தன் அடுத்த வாரமும் சேவ்.

  English summary
  Bigg Boss fans upset over Jithan Ramesh and Nisha phone call scenes. Nisha saves Ramesh next week also.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X