Don't Miss!
- News
பெண்கள் தான் குறியே.. விடாது துரத்தும் தாலிபான்கள்..ஆப்கனில் விழுந்த புதிய தடை.. அடபாவமே! என்னாச்சு?
- Automobiles
சுஸூகி ஜிம்னி எலெக்ட்ரிக் காரை தயாரிக்க முடிவு, இந்திய வருகை எப்பொழுது தெரியுமா?
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Sports
இதை செய்தால் போதும்.. உலக கோப்பையை இந்தியா வெல்லும்.. முன்னாள் கேப்டன் கங்குலி அறிவுரை
- Finance
எல்ஐசி, எஸ்பிஐ, மியூச்சுவல் பண்ட்களுக்கும் பிரச்சனையா.. முதலீடு என்னவாகும்.. அதானியால் கஷ்டகாலம்!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
நட்சத்திர ஓட்டலில் நடந்தது திருமணம்.. தனது காதலியை கரம் பிடித்த பிரபல ஹீரோ.. திரையுலகம் வாழ்த்து!
ஐதராபாத்: பிரபல நடிகர் நிதின் திருமணம் நட்சத்திர ஓட்டலில் நடந்தது. இதில் நெருங்கிய சொந்தங்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
ஜெயம் படம் மூலம் தெலுங்கில் ஹீரோவாக அறிமுகமானவர் நிதின். இப்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.
தெலுங்கு தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரான சுதாகர் ரெட்டியின் மகன் இவர். இந்தப் படம் தமிழில் ரவி நடிப்பில் ஜெயம் என்ற பெயரிலேயே ரீமேக் ஆகி, சூப்பர் ஹிட்டானது.
எப்படி எல்லா தலைகளையும் திரும்ப வச்சேன் பார்த்தீங்களா.. மோனோகினியில் அக்னி கொடுத்த அல்ட்ரா போஸ்!

ராஷ்மிகா மந்தனா
தெலுங்கில் பல ஹிட் படங்களில் நடித்துள்ள நிதின், ராம்கோபால் வர்மா இயக்கிய அக்யுத் படம் மூலம் இந்திக்கும் சென்றார். இப்போது வெங்கு குடுமுலா இயக்கிய பீஷ்மா என்ற காமெடி படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றது. இதில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்தார். அடுத்து ரங்க் தே உட்பட சில படங்களில் நடித்து வருகிறார்.

துபாயில் திருமணம்
சில படங்களை தயாரித்தும் உள்ள நிதின், ஷாலினி என்பவரை சில வருடங்களாகக் காதலித்து வந்தார். இவர்கள் காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். திருமணத்தை ஏப்ரல் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் துபாயில் நடத்த திட்டமிட்டிருந்தனர். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தள்ளிவைப்பு
கொரோனா காரணமாக அது தள்ளி வைக்கப்பட்டது. 'மாஸ்க் அணிந்து கொண்டு திருமணம் செய்துகொள்ள தனக்கு விருப்பம் இல்லை என்பதால் திருமணத்தை தள்ளி வைத்ததாக நிதின் தெரிவித்திருந்தார். 'ஒவ்வொருவர் வாழ்விலும் திருமணம் முக்கியமான நிகழ்ச்சி. அதைவிட முக்கியம் உயிர். அதனால் திருமணத்தைத் தள்ளி வைத்தோம்' என்றும் அவர் கூறியிருந்தார்.

நிச்சயதார்த்த விழா
இந்நிலையில், ஜூலை 26 ஆம் தேதி (நேற்று) திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தனர். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில் திருமணத்துக்கு முன்பு கடந்த 22 ஆம் தேதி நெருங்கிய சொந்தங்கள் முன்னிலையில் நிச்சயதார்த்த விழா நடந்தது. இதில் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் உட்பட சில திரைத் துறையினரும் கலந்து கொண்டனர்.

பேலஸ் ஓட்டலில்
இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள தாஜ் பாலாக்ணுமா பேலஸ் ஓட்டலில் நிதின் - ஷாலினி திருமணம் நேற்று நடந்தது. இதில் அவருடைய நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர். நடிகர்கள் வருண் தேஜ், சாய் தரண் தேஜ் உட்பட சில நடிகர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். சமூக வலைதளங்களிலும் நடிகர் நிதினுக்கு வாழ்த்துக்களை திரையுலகினர் தெரிவித்து வருகின்றனர்.