»   »  நிதின் சத்யாவின் தயாரிப்பில் நடிக்கவிருக்கும் ஜெய்!

நிதின் சத்யாவின் தயாரிப்பில் நடிக்கவிருக்கும் ஜெய்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : வெங்கட்பிரபு இயக்கிய 'சென்னை 28' படத்தில் நடித்ததன் மூலம் நடிகர் ஜெய்யும், நடிகர் நிதின் சத்யாவும் நண்பர்களானார்கள். அந்தப்படத்தில் நடித்தபோது ஏற்பட்ட நட்பு இன்று வரை தொடர்கிறது.

வெங்கட்பிரபுவின் 'பார்ட்டி' படத்தில் இருவருமே இருந்தாலும், இப்போது தனி டீம் ஒன்றை உருவாக்கியுள்ளார் நடிகர் நிதின் சத்யா. இதுவரை நடிகராக மட்டுமே இருந்த நிதின் சத்யா, ஒரு படத்தைத் தயாரித்து அதில் ஹீரோவாக நடித்தார்.

 Nithin sathya turns to producer

அவர் தயாரித்த படம் ட்ராப் ஆனது. இந்நிலையில் தன்னுடைய நிதித் தேவைக்காக தற்போது ஜெய்யை ஹீரோவாக்கி புதிய படம் ஒன்றைத் தயாரிக்கிறார் நிதின் சத்யா.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை வெங்கட்பிரபுவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய பிச்சுமணி இயக்கி வருகிறார். 'ஜேக்கப்பிண்டே ஸ்வர்கராஜ்ஜியம்' மலையாளப் படத்தின் ஹீரோயின் ரெபா மோனிகா ஜான் இந்தப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.

 Nithin sathya turns to producer

ஆக்‌ஷன், சென்டிமென்ட், காமெடி கலந்த படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு அரவிந்த் ஒளிப்பதிவு செய்கிறார். கால்வாசி படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கும் இப்படத்தை அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார் நிதின் சத்யா.

English summary
Actor Jay and actor Nithin Sathya became friends by acting in 'Chennai 600028'. Nithin Sathya, starred and produced a movie, was dropped in half. Nithin Sathya is currently producing a new film lead by Jai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil