Don't Miss!
- News
"நன்றி அண்ணா.. நாம சேர்ந்துட்டோம்.. அவங்களுக்கு பின்னடைவு ஆரம்பம்" - ஸ்டாலினுக்கு தேஜஸ்வி மெசேஜ்!
- Automobiles
விமான பணிப்பெண்களுக்கு இவ்ளோ சம்பளம் தர்றாங்களா! இத்தன சலுகைகள் வேற இருக்கா! இதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்!
- Finance
மைக்ரோசாப்ட்: 200 பேர் பணிநீக்கம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!
- Technology
கொடுக்குற ஒவ்வொரு ரூபாய்க்கும் 'வொர்த்' ஆன Samsung போன் இந்தியாவில் அறிமுகம்!
- Sports
"ஒருமுறை கூட நோ சொல்லல" செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடு.. முதல்வரை புகழ்ந்துதள்ளிய செஸ் கூட்டமைப்பு தலைவர்
- Lifestyle
வெஜ் சால்னா
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
திருச்சிற்றம்பலம் படம் பற்றி நித்யா மேனன் சொன்ன சூப்பர் தகவல்
சென்னை : டைரக்டர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தனுஷ், ராஷி கன்னா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 18 ம் தேதி ரிலீசாக உள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 7 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ், அனிருத் காம்போ இணைந்துள்ள படம் இதுவாகும்.இந்நிலையில் திருசு்சிற்றம்பலம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றுள்ளது.
இந்த விழாவில் அனிருத் மற்றும் தனுஷ் இணைந்து பாடிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஆடியோ வெளியீட்டு விழா விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பப்பட உள்ளது. இந்த விழாவில் நடிகை நித்யா மேனன், வீல் சேரில் வந்து கலந்து கொண்டு அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.
படியில் இருந்து தவறி விழுந்ததால் நித்யா மேனனுக்கு காலில் அடிபட்டது. இதனால் அவர் தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். மற்றொரு பட விழாவிலும் நித்யா மேனன் வீல் சேரில் வந்து தான் கலந்து கொண்டார்.
அமீர்கான், மகேஷ் பாபுன்னு பிரபலங்களே தேடிப் போறாங்களே.. யார் இந்த 25 வயசு பொண்ணு நிஹாரிகா?
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் திருச்சிற்றம்பலம் படத்தில் பணியாற்றியது பற்றி நித்யா மேனன் தெரிவித்தார். அதில் அவர், திருச்சிற்றம்பலம் மிக அழகான கதை. நடுத்தர வர்க்கத்திற்கும் கீழான சூழலை புரிந்து கொண்டு தனுஷ் நடித்துள்ளார். எனக்கு அது அவ்வளவாக பழக்கமில்லை. எனக்கு இது வித்தியாசமாக இருந்தது.
தனுஷின் நடிப்பை உற்று கவனித்தது எனக்கு பயனுள்ளதாக இருந்தது. அவரது பேசுவது, நடிப்பதில் இருந்து நிறைய விஷயங்களை நான் கற்றுக் கொண்டேன். திருச்சிற்றம்பலம் குடும்ப சம்பந்தப்பட்ட கதை. 3 வெள்வேறு விதமான தலைமுறைகளை சேர்ந்த ஆண்களை பற்றிய கதை.
இந்த படத்தில் பாரதிராஜா, தனுஷின் தாத்தாவாக நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ், தனுஷின் அப்பாவாக நடித்துள்ளார். இவர்கள் 3 பேரை பற்றியது தான் திருச்சிற்றம்பலம் படத்தின் கதை என தெரிவித்துள்ளார். இதனால் திருச்சிற்றம்பலம் படத்தின் கதை என்ன என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.