»   »  நடிகை ஜெயசுதாவின் கணவர் ஏன், எப்படி தற்கொலை செய்து கொண்டார்?: கண்டுபிடித்த போலீஸ்

நடிகை ஜெயசுதாவின் கணவர் ஏன், எப்படி தற்கொலை செய்து கொண்டார்?: கண்டுபிடித்த போலீஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை ஜெயசுதாவின் கணவர் தனது சகோதரி வீட்டு மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

நடிகை ஜெயசுதாவின் கணவரும், தயாரிப்பாளருமான நிதின் கபூர் மும்பையில் உள்ள அவரது அலுவலகத்தில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறப்பட்டது.

அவர் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்பட்டது.

நிதின்

நிதின்

மும்பை அந்தேரி பகுதியில் வசித்து வரும் தனது சகோதரியுடன் வசித்து வந்துள்ளார் நிதின். நிதினின் குடும்பம் ஹைதராபாத்தில் வசித்து வந்துள்ளது. நிதினுக்கு கடும் நிதி பிரச்சனை இருந்துள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

சிகிச்சை

சிகிச்சை

கடந்த 18 மாதங்களாக பணப் பிரச்சனையால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார் நிதின். இதற்காக அவர் கடந்த மாதம் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

தற்கொலை

தற்கொலை

மன அழுத்தத்தால் அவதிப்பட்டு வந்த நிதின் கபூர் தனது சகோதரி வசித்து வரும் 6 அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடிக்கு சென்றுள்ளார். மாடியின் கதவு பூட்டியிருந்ததை பார்த்த அவர் பூட்டை உடைத்து அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடிதம்

கடிதம்

நிதின் கபூர் தற்கொலை செய்யும் முன்பு கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லையாம். நிதின் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்று விசாரணை நடத்தி வருவதாக போலீசார் கூறியுள்ளனர்.

English summary
According to Mumbai police, actress Jayasudha's husband Nitin Kapoor jumped off from the terrace of a six storey building.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil