அசல் போனதும் இப்படித்தான் இருந்தேன்… அதனால தான் அப்படி பேசுனாங்க: மனம் திறந்த நிவாஷினி

சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கடந்த வாரம் சிங்கப்பூர் மாடல் நிவாஷினி எவிக்சன் செய்யப்பட்டார்.

முன்னதாக பிக் பாஸ் வீட்டில் அசல் கோளாறும் நிவாஷினியும் அடித்த அட்ராசிட்டிகளை நெட்டிசன்கள் பயங்கரமாக ட்ரோல் செய்திருந்தனர்.

இந்நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிவாஷினி, முதன்முறையாக அசல் கோளாறு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

சிங்கப்பூர் மாடல் நிவாஷினி

சிங்கப்பூர் மாடல் நிவாஷினி

பிக் பாஸ் சீசன் 6-ல் சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, சீரியல் நடிகர் அசீம், அசல் கோளாறு, அமுதவாணன், ஜிபி முத்து, ராபர்ட் மாஸ்டர், விக்ரமன், ஏடிகே, ரக்ஷிதா, ஆயிஷா, ஷிவின், ஜனனி என மொத்தம் 21 போட்டியாளர்கள் பங்கேற்றனர். மீடியாவில் ஜொலிக்க வேண்டும் என்ற கனவுடன் பிக் பாஸ் வீட்டில் அடியெடுத்து வைத்த நிவாஷினி அசல் கோளாறுவுடன் ஐக்கியமானதால், போட்டியில் சரியாக விளையாடாமல் இருந்தார். ஜோர்த்தாலே பாடல் மூலம் பிரபலமான அசல் கோளாறுக்கு ரசிகர்களிடம் நல்ல ஆதரவு இருந்தது. ஆனால் அவர் குயின்ஷி, ஆயிஷா நிவாஷினி என பிக் பாஸ் வீட்டின் ப்ளே பாயாக இருந்ததால் நெட்டிசன்கள் ட்ரோல் செய்யத் தொடங்கினர்.

அசலை பிரிந்த வருத்தம்

அசலை பிரிந்த வருத்தம்

இந்நிலையில், அசல் கோளாறு, நிவாஷியிடம் எல்லை மீறியதாக நினைத்த ரசிகர்கள் அவரை எவிக்சனுக்குள் தள்ளிவிட்டனர். இதனால் இரண்டாவது வாரத்திலேயே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் அசல் கோளாறு. அப்போது அசலை பிரியமுடியாமல் கண்ணீர்விட்டு கதறி அழுதார் நிவாஷினி. அதுமட்டும் இல்லாமல் அசலின் சட்டைகளை எடுத்து வைத்துக்கொண்டு அவர் நினைவாகவே கேமரா முன்பு பேசிக்கொண்டே இருந்தார். அதன்பின்னர் மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு திரும்பிய நிவாஷினி, போட்டியில் கொஞ்சம் வேகம் காட்டினார்.

மனம் திறந்த நிவாஷினி

மனம் திறந்த நிவாஷினி

ஆனால், யார் கண் பட்டதோ தெரியவில்லை, கம்பேக் கொடுக்க நினைத்த நிவாஷினி கடந்த வாரம் எவிக்சன் செய்யப்பட்டார். அதன்பின்னர் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டிக்கொடுத்துள்ள நிவாஷினி, பிக் பாஸ் வீட்டின் ஸ்ட்ராங் ப்ளேயர் என விக்ரமன், ஷிவின் இருவரையும் கை காட்டியுள்ளார். அதேபோல், அசீம் விளையாடுவது குறித்தும் விமர்சனம் செய்துள்ளார். அதேபோல், அசல் குறித்து பேசிய நிவாஷினி, "கோளாறு எனக்கு நல்ல பிரெண்ட் தான், நான் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்ததால் எனக்கு நண்பர்களில் ஆண், பெண் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது. நான் மற்றவர்களின் பிரண்ட்ஷிப்பை பற்றி கண்டுகொள்ளவில்லையே என கேஷுவலாக உண்மையை பேசியுள்ளார்.

அசல் கோளாறுவின் விளக்கம்

அசல் கோளாறுவின் விளக்கம்

முன்னதாக அசல் கோளாறுவும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய உடனே பேட்டி கொடுத்திருந்தார். அதில், நான் எப்போதும் போல இயல்பாகவே இருந்தேன். நிவாஷினியிடம் நான் நெருங்கி பழகியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக விளக்கம் கொடுத்தார். மேலும், நான் எப்போதும் எனது இயல்பை இழக்க மாட்டேன் எனவும் நேர்மையாக பதிலளித்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அசல் தெரிவித்த அதே பதிலை தான் தற்போது நிவாஷினியும் கூறியுள்ளதால், இந்த விசயத்தில் நெட்டிசன்கள் ட்ரோல் செய்தது எல்லாம் தேவையில்லாத ஆணியாக போய்விட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X