மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் போட்டோ: சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்
சென்னை:மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளபோது நிவேதா பெத்துராஜ் மட்டும் எப்படி புகைப்படம் எடுத்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒரு நாள் கூத்து படம் மூலம் நடிகையானவர் நிவேதா பெத்துராஜ். விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் நிவேதா.
அவர் அண்மையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

நிவேதா
கோவிலுக்குள் அவர் பிரசாதத்துடன் இருக்கும் சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். மேலும் சில வீடியோக்களையும் வெளியிட்டார். அந்த புகைப்படங்கள், வீடியோக்களை பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

செல்போன்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது நிவேதா மட்டும் எப்படி புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்தார் என்ற கேள்வி எழுந்தது.

இன்ஸ்டாகிராம்
நடிகை என்றால் செல்போன் எடுத்துச் செல்ல கோவில் நிர்வாகம் அனுமதிக்குமா என்று நெட்டிசன்கள் விளாசத் துவங்கினார்கள். இதை பார்த்த நிவேதா பிரச்சனை எதற்கு என்று நினைத்து கோவிலுக்குள் எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை நீக்கிவிட்டார்.

நடவடிக்கை
தடையை மீறி செல்போனை எடுத்துச் சென்று புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்த நிவேதா பெத்துராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











