நிவேதா பெத்துராஜ் காதலிப்பது பிக் பாஸ் ஜூலியின் முன்னாள் காதலரா? ஷாக் ஆன ரசிகர்கள்!

சென்னை: சில தினங்களுக்கு முன்னர் நடிகை நிவேதா பெத்துராஜ் தனது காதலரை அறிமுகம் செய்து வைத்தார். இருவரும் கட்டிப் பிடித்துக் கொண்டு இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தார்கள். இப்படி இருக்கும்போது நிவேதா பெத்துராஜின் காதலர் ரஜித் இப்ரான், பிக்பாஸ் ஜூலியின் முன்னாள் காதலர் என்று கூறப்படுகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கில் யுனிக்கான கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இவரது படங்கள் தொடங்கி, கதாபாத்திர தேர்வு ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. இவர் நடிப்பில் மட்டும் இல்லாமல் கார் பந்தயத்திலும் கலந்து கொண்டு வருகிறார். இப்படி இருக்கையில் அவ்வப்போது ரசிகர்கள் அவரை நோக்கி எழுப்பும் கேள்வி, நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா என்பதுதான். அதே நேரத்தில் நடிகர் ஒருவருடன் அவர் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக கிசுகிசுக்களும் உருவானது. ஆனால் நடிகை அதற்கு எல்லாம் ரியாக்ட் செய்யாமல் அமைதியாக இருந்தார்.

Nivetha Pethuraj Lover Rajhith Ibran Was Bigg Boss Julie s Ex Lover X Page Post Goes Trending
Photo Credit:

இப்படி இருக்கையில் அவர் கடந்த வாரத்தில் தனது காதலர் ரஜித் இப்ரானை அறிமுகம் செய்து வைத்தார். ரஜித் இப்ரான் துபாயில் தொழிலதிபராக உள்ளார். மேலும் அவர் மாடலிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். இப்படி இருக்கும்போது, நிவேதா பெத்துராஜ் தனது குழந்தை பருவத்தில் துபாயில் தான் இருந்தார். இது மட்டும் இல்லாமல் இப்போதும் அவரது குடும்பம் துபாயில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. துபாயிலேயே ரஜித் இப்ரானை இவர் சந்தித்திருக்க வேண்டும் என்றும் பேசி வருகிறார்கள்.

இப்படி இருக்கும்போது தற்போது, ரஜித் இப்ரான் பிக் பாஸ் ஜூலியின் முன்னாள் காதலர் என்று பலரும் கூறி வருகிறார்கள். பிக் பாஸ் ஜூலி தனது எக்ஸ் பக்கத்தில், கடந்த 2018ஆம் ஆண்டு ரஜித் இப்ரானுடன் இருந்த புகைப்படங்கள், அவருடன் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இது மட்டும் இல்லாமல் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தும் அவரது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ரஜித் இப்ரான் தொடர்பான அனைத்து போஸ்ட்களிலும் தனது பெஸ்டி என்று குறிப்பிட்டுள்ளார்.

அதனால்தான் இணையவாசிகள், ரஜித் இப்ரான் பிக்பாஸ் ஜூலியின் முன்னாள் காதலராக இருக்க கூடும். ஏதாவது ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையில் பிரிவு ஏற்பட்டிருக்கலாம். அதன் பின்னர் நிவேதா பெத்துராஜ் மற்றும் ரஜித் இப்ரான் காதலிக்கத் தொடங்கி இருக்கலாம் எனவும் பேசி வருகிறார்கள். பெஸ்டி என குறிப்பிட்டு ஜூலி பதிவிட்டதாலே இப்ரானை அவரது முன்னாள் காதலர் என பலரும் நினைத்துக் கொண்டார்கள் போல எனவும் சிலர் பதிவிட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X