twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    5 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன், ஆண்களே ஒரு விஷயம் செய்வீங்களா?: நிவேதா பெத்துராஜ்

    By Siva
    |

    Recommended Video

    5 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன்-நிவேதா பெத்துராஜ்-வீடியோ

    சென்னை: நடிகை நிவேதா பெத்துராஜ் ஆண்கள் அனைவருக்கும் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கதுவாவில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அந்த பரபரப்பு அடங்கும் முன்பு சூரத்தில் 9 வயது சிறுமி சீரழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

    இந்த நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற குரல்கள் அனைத்து திசைகளிலும் கேட்கிறது.

    வீடியோ

    வீடியோ

    சிறு வயதில் தானும் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக நடிகை நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ளார். பெண்களின் பாதுகாப்பு குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

    தொல்லை

    தொல்லை

    இந்த வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கும் பல பெண்களும் சரி, ஆண்களும் சரி சிறு வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளாகியிருப்பார்கள். என்னையும் சேர்த்து தான். 5 வயதில் நடந்ததை அம்மா, அப்பாவிடம் எப்படி சொல்வது. அப்போதெல்லாம் அது என்னவென்றே எனக்கு தெரியாது.

    இது போன்ற பாலியல் தொல்லை பெரும்பாலும் சொந்தக்காரர்கள், தெரிந்தவர்கள், நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர்களால் தான் நடக்கும்.
    அனைத்து பெற்றோரும் மிகவும் பொறுப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்கிறார் நிவேதா.

    குழந்தைகள்

    குழந்தைகள்

    யார் எப்படி பேசினால் தப்பு, எங்கு தொட்டால் தப்பு என்பதை எல்லாம் 2 வயதில் இருந்தே குழந்தைகளிடம் சொல்ல ஆரம்பியுங்கள். ஸ்கூல், பக்கத்து வீடு, டியூஷனில் என்ன நடக்கிறது என்று தெரியாது. அதனால் சின்ன வயதில் இருந்தே குழந்தைகளிடம் சொல்ல ஆரம்பிங்க. இது என் வேண்டுகோள் என்று நிவேதா தெரிவித்துள்ளார்.

    வேண்டுகோள்

    வேண்டுகோள்

    ஆண் நண்பர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். உங்களில் பெரும்பாலானோர் எங்களுக்கு நிறைய செய்கிறீர்கள் என்பது எனக்கு தெரியும். ஒவ்வொரு தெருவிலும் 8 முதல் 10 பேர் சேர்ந்து ஒரு குழு அமைத்து இரண்டு இரண்டு பேராக முறை எடுத்து தெருவில் என்ன நடக்கிறது என்பதை கவனிக்கவும். தெருவில் ஏதாவது வேறு மாதிரி நடந்தால் நீங்கள் கண்டுபிடித்து தட்டிக் கேட்கலாம் என்று நிவேதா கூறியுள்ளார்.

    பெண்கள்

    பெண்கள்

    எனக்கு இப்போதெல்லாம் வெளியே சென்றாலேயே பயமாக உள்ளது. யாரை பார்த்தாலும் சந்தேகம் ஏற்படுகிறது. இதை எல்லாம் தவிர்க்க முடியும். எங்களுக்கு பாதுகாப்பான இடத்தை அளிப்பது சின்ன விஷயம் என்கிறார் நிவேதா பெத்துராஜ்.

    English summary
    Actress Nivetha Pethuraj has requested all men to come forward to provide a safe place for women. She has released a video about this as the whole nation is angry over Kathua and Surat rapes.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X