தேசிய கொடியுடன் கிளிமஞ்சரோ மலையில் ஏறிய ரஜினி, கமலின் ரீல் மகள்

சென்னை : மலையாளம், தமிழ் என தென்னிந்திய மொழி சினிமாவில் புகழ்பெற்ற நடிகையாக இருப்பவர் நிவேதா தாமஸ். இவர் தர்பார் படத்தில் ரஜினிக்கு மகளாகவும், பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாகவும் நடித்திருந்தார்.

ஜில்லா படத்தில் விஜய்யின் தங்கை ரோலிலும் நடித்து அசத்தி இருந்தார் நிவேதா. இவர் தற்போது புகழ்பெற்ற கிளிமஞ்சாரோ மலையில் ஏறி சாதனை படைத்துள்ளார். இதற்காக நிவேதா தாமசுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

உயரமான மலை

உயரமான மலை

கிளிமஞ்சரோ மலை, தான்சானியா நாட்டில் அமைந்துள்ளது. இது ஆப்ரிக்காவின் மிக உயரமான மலை மட்டுமல்ல, உலகின் மிக உயரமான தனி மலையும் இது தான். இமயமலை தொடரை விட உயரம் அதிகம் கொண்ட மலை இல்லை என்றாலும், மூன்று எரிமலை முகடுகளை கொண்ட மலை இது.

டிரெண்டிங்கில் நிவேதா

டிரெண்டிங்கில் நிவேதா

இந்த மலையில் தான் ஏறிச் சென்று சாதனை படைத்துள்ளார் நிவேதா. இதனையடுத்து சோஷியல் மீடியாக்களில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறார் நிவேதா தாமஸ். மலையேறுவதை வழக்கமாக கொண்ட பலரின் கனவு, கிளிமஞ்சரோவில் ஏற வேண்டும் என்பது தான். ஆனால் ஒரு நடிகையான நிவேதா அதை செய்துள்ளதை அனைவரும் வியந்து பாராட்டி வருகிறார்கள்.

தேசிய கொடியுடன் சாதனை

தேசிய கொடியுடன் சாதனை

இந்திய தேசியக் கொடியுடன் கிளிமஞ்சரோ மலை உச்சியில் நிற்கும் ஃபோட்டோக்களை நிவேதா தாமஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவரின் இந்த போஸ்ட்டை ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் பாராட்டி வருகிறார்கள். நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

 பிரபலமான குழந்தை நட்சத்திரம்

பிரபலமான குழந்தை நட்சத்திரம்

நிவேதா தாமஸ் கடைசியாக தெலுங்கில் வக்கீல் சாப் படத்தில் பவன் கல்யாணுடன் இணைந்து நடித்தார். தற்போது தெலுங்கில் Meet Cute, Shakini Dhakini என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி, தற்போது புகழ்பெற்ற நடிகையாக வளர்ந்துள்ளவர்களில் நிவேதா தாமசும் ஒருவர்.

மன் டிவி சீரியல்களில் நிவேதா

மன் டிவி சீரியல்களில் நிவேதா

சன் டிவி.,யில் ஒளிபரப்பான மை டியர் பூதம் சீரியலில் முக்கிய ரேக்டரில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நிவேதா, ராதிகா நடித்த அரசி சீரியலிலும் நடித்துள்ளார். பல சீரியல்களில் நடித்த பிறகு மலையாளம், தெலுங்கு, தமிழ் என பல சொழி சினிமாக்களிலும் கேரக்டர் ரோல்களில் நடித்து, பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X