ரஜினிப்பாவுக்கு கட்டாயம் சமைத்து தருவேன்.. நிவேதா தாமஸ் விருப்பம்

சென்னை: வாய்ப்பு கிடைத்தால் ரஜினிக்கு நான் கட்டாயம் சமைத்து தருவேன் என்று நிவேதா தாமஸ் கூறியுள்ளார்.

தர்பார் படம் கடந்த ஜனவரி 9 வெளியானது. ரஜினி ரசிகர்கள் ஆஹா என்று புகழ்ந்தாலும், ஒரு தரப்பினர் முருகதாஸ் படத்தில் நாங்கள் இதை எதிர்க்கவில்லை என்றனர். பல கலவையான விமர்சனங்களை சந்தித்துள்ளது தர்பார்.

Nivetha thomas has said i will cook for rajini

இந்த படத்தில் ரஜினியின் நடிப்பு இதுவரை இல்லாத படங்களில் இந்த படத்தில் இருந்ததாக ரஜினி ரசிகர்கள் கூறினார்கள்.மேலும் ரசிகர்களை படத்தில் வெகுவாக கவர்ந்த கதாபாத்திரம் என்றால் அது நிவேதா தாமஸின் ரஜினியின் மகள் கதாபாத்திரம் தான் .பல வகை மக்களும் இந்த படத்தில் சிறப்பாக நடித்தற்காக நிவேதா தாமஸை சமூக வளைத்தலகளின் வாயிலாக வெகுவாக பாராட்டி வருகின்றனர் .

சமீபத்தில் நிவேதா தாமஸ் தர்பார் படத்திற்காக கொடுத்த பேட்டியில், பல சுவாரஸ்யமான தகவல்களையும் படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். தான் நடித்ததிலே ரஜினி சிறந்த அப்பாவா அல்லது கமல் சிறந்த அப்பாவா என்று சொல்ல முடியாது அந்த அளவிற்கு ரஜினியும் சிறந்த நடிப்பை கொடுத்து இருந்தார் நான் அருகில் இருந்து பார்த்ததினால் அது கண்கூட தெரிந்தது என்று நிவேதா கூறினார் .
மேலும் நிவேதா கூறுகையில் நாங்கள் படப்பிடிப்பு தளங்களில் எதை பேச துவங்கினாலும் என்ன சாப்டீங்க என்று சாப்பாட்டின் மூலம் தான் பேச்சை துவங்குவோம் என்று கூறினார் .நான் சில சமயங்களில் பீட்சா சாப்பிடுவேன் ரஜினி சாரும் அதில் ஒரு துண்டு எடுத்து கொள்வார் .

ஒரு முறை நான் சமைத்து தரவா என்று கேட்டதற்கு, ஓ கட்டாயமா சாப்டுறேன் எ‌ன்று ஒத்து கொண்டார் ரஜினி சார். எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று காத்து இருக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் தான் கட்டாயம் சமைத்து தருவேன் என கூறினார் நிவேதா அப்படி சமைத்தால் நான் சாம்பார் சாதம் செய்து தருவேன் என கூறினார் .

கடைசியாக ரஜினியை பற்றி கூறுகையில் ரஜினியிடம் எனக்கு மிகவும் பிடித்தது .ரஜினி யார் மனதையும் புண்படாத வண்ணம் நடந்து கொள்ளும் விதம் தான், அது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது .ஏனெனில் யார் மனதையும் எளிதில் புண்படுத்தி விடலாம் ஆனால் அதனை செய்யாமல் நடத்து கொள்வது தான் மிகவும் கடினம் அதனை ரஜினி செய்து வருவது தான் எனக்கு மிகவும் பிடித்தது என்று கூறினார் .

நிவேதா தாமஸ் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வரும் செண்டிமெண்ட் காட்சிகள் மிகவும் அழுத்தமாக இருந்தது . தர்பார் படம் மாபெரும் வசூல் சாதனை செய்து வருவதாக பலரும் கூறி வருகின்றனர் .பொங்கல் விடுமுறையிலும் மிக பெரிய வசூல் சாதனையை தர்பார் நிகழ்தும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X