»   »  பிரேமம் படத்தைத் தொடர்ந்து மீண்டும் 'பிளேபாயாக' மாறும் நிவின் பாலி

பிரேமம் படத்தைத் தொடர்ந்து மீண்டும் 'பிளேபாயாக' மாறும் நிவின் பாலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: மலையாள நடிகர் நிவின் பாலி தனது அடுத்த படத்தில் கல்லூரி மாணவனாக நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மலையாளத்தில் கடந்த ஆண்டு வெளியான பிரேமம் பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்றாக மாறியது. மேலும் அதிகம் வசூல் செய்த டாப் 5 மலையாளப் படங்கள் வரிசையிலும் இடம்பெற்றது.

பிரேமம் படத்தில் நிவின் பாலி நடித்த கல்லூரி மாணவர் வேடம் கேரள இளைஞர்கள் மத்தியில் லைக்ஸ்களை வாரிக் குவித்தது.இந்நிலையில் மீண்டும் தனது அடுத்த படத்தில் நிவின் கல்லூரி மாணவராக நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

நிவின் பாலி

நிவின் பாலி

மலையாள நடிகர் நிவின் பாலியின் படங்களுக்கு கேரள ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி வரவேற்பு உள்ளது.இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பிரேமம் படம் கேரள பாக்ஸ் ஆபிஸ் வரலாறுகளை அடித்து நொறுக்கியது. திருட்டு சிடி வடிவில் பிரேமம் வெளியானாலும் கூட தியேட்டர்களில் கூட்டம் குறையவில்லை. மேலும் தமிழ்நாட்டிலும் இப்படம் 200 நாட்கள் வெற்றிகரமாக ஓடி சாதனை புரிந்தது.

கல்லூரி மாணவர்

கல்லூரி மாணவர்

இதில் நிவின் பாலி அணிந்து நடித்த வேஷ்டி, கருப்பு சட்டை மற்றும் கண்ணாடி ஆகியவை இளைஞர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக அவர் மாதிரி அடர்ந்த தாடியை நிறைய இளைஞர்கள் வைத்துக் கொண்டு கல்லூரிகளுக்கு இளைஞர்கள் செல்ல ஆரம்பித்தனர். இதில் உச்சகட்டமாக கடந்த வருடம் ஓணம் பண்டிகைக்கு நிவின் பாலியின் தோற்றத்தில் கேரள இளைஞர்கள் கல்லூரிகளுக்கு சென்றது பரபரப்பான விஷயமாக மாறியது.

மீண்டும் மாணவராக

மீண்டும் மாணவராக

இந்நிலையில் பிரேமம் புகழ் அல்தாப் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் நிவின் மீண்டும் கல்லூரி மாணவனாக நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன. தற்போதைய நிலவரப்படி மல்லுவுட்டின் பிஸியான நடிகராக மாறியிருக்கும் நிவின் இந்தப் படத்தில் கல்லூரி மாணவர் அணித் தலைவனாக நடிக்கவிருக்கிறார்.

ஆக்ஷன் ஹீரோ பிஜு

ஆக்ஷன் ஹீரோ பிஜு

தற்போது ஆக்ஷன் ஹீரோ பிஜு படத்தில் போலீசாக நடித்துக் கொண்டிருக்கும் நிவின் இந்தப் படம் முடிந்ததும் அல்தாப் இயக்கத்தில் நடிப்பார் என்று கூறுகின்றனர். நிவின் பாலி முதல்முறையாக ஆக்ஷன் ஹீரோ பிஜு படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

பிரேமம் படத்தைத் தொடர்ந்து நிவின் பாலி மீண்டும் கல்லூரி மாணவராக நடிப்பது கல்லூரி மாணவர்கள் இடையே பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் படத்தின் நடிக,நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை தேர்வு செய்த பின்னர் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Nivin Pauly is all set to play yet another college student character. Reportedly, Nivin is playing the role of a happy-go-lucky college student, in Premam fame Altaf's directorial debut.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil