»   »  தமிழ் ரசிகர்களுக்காக தூத்துக்குடி ரவுடி 'ரிச்சி'யாக மாறிய நிவின் பாலி

தமிழ் ரசிகர்களுக்காக தூத்துக்குடி ரவுடி 'ரிச்சி'யாக மாறிய நிவின் பாலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நிவின் பாலி நடித்து வரும் ரிச்சி பட வேலைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

நேரம், பிரேமம் பட புகழ் நிவின் பாலி நடித்து வரும் தமிழ் படம் ரிச்சி. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ரவுடியாக நிவின் பாலி நடித்து வருகிறார். கவுதம் ராமச்சந்திரன் இயக்கி வரும் இந்த படத்தில் நட்டி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் உள்ளனர்.

Nivin Pauly's Richie reaches final stage

தூத்துக்குடி, மணப்பாடு, குற்றாலம் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. நம்ம செல்லம் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Nivin Pauly's Richie reaches final stage

கன்னடத்தில் வெற்றி பெற்ற உலதவரு கண்டந்தே படத்தின் ரீமேக் தான் ரிச்சி. ரிச்சி என்பது நிவின் பாலி கதாபாத்திரத்தின் பெயர் ஆகும். முதல் முறையாக நிவின் பாலியே தமிழில் டப்பிங் பேசுகிறார்.

Nivin Pauly's Richie reaches final stage

பட வேலைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதை நிவின் பாலியே ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

English summary
Nivin Pauly starrer Richie has reached its final stage. Nivin Pauly is not only acting in a direct tamil movie but also lends his voice in tamil.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil