‘சான்டா மரியா’... நிவின் பாலி நடிக்கும் தமிழ் படத்தின் பெயர்!

சென்னை: நிவின் பாலி நடித்துவரும் நேரடித் தமிழ்ப் படத்திற்கு சான்டா மரியா எனப் பெயரிடப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நேரம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவின் பாலி. தொடர்ந்து அவரது நல்ல நேரம், பிரேமம், பெங்களூரு நாட்கள் என மலையாளத்தைப் போலவே தமிழிலும் அவருக்கு ரசிகர் வட்டம் உருவானது.

Nivin Pauly's Tamil film is titled Santa Maria

இந்நிலையில், தற்போது மற்றொரு நேரடித் தமிழ்ப் படமொன்றில் நடித்து வருகிறார் நிவின்பாலி. கன்னடத்தில் வெளியான 'உலிதவரு கண்டன்தே' என்ற படத்தின் தமிழ் ரீமேக்கான இதனை மிஷிகினின் உதவி இயக்குனர் கௌதம் இயக்கிறார்.

யூ டர்ன் என்கிற படம் மூலமாக கவனம் பெற்றுள்ள கன்னட நடிகை ஸ்ரத்தா ஸ்ரீனி இப்படத்தின் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தூத்துக்குடியில் தொடங்கியது.

இந்நிலையில், இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு சான்டா மரியா எனப் படக்குழு பெயர் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X