»   »  பிரபுதேவாவுடன் காதல் முறிவு: புதிய தமிழ்ப் படங்களுக்கு கால்ஷீட் தரும் நயன்!

பிரபுதேவாவுடன் காதல் முறிவு: புதிய தமிழ்ப் படங்களுக்கு கால்ஷீட் தரும் நயன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Nayantara and Prabu Deva
சென்னை: கடந்த நான்காண்டுகளாக பேசப்பட்ட நயன்தாரா - பிரபு தேவா காதல் விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டது. இருவருக்கும் திருமணம் நடக்காது என்றும், நிரந்தரமாகப் பிரிந்துவிட்டனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

திருமணம் கிட்டத்தட்ட இல்லை என்றாகிவிட்ட நிலையில், இப்போது புதிய படங்களுக்கு கால்ஷீட் தருவதில் தீவிரமாக உள்ளார் நயன்தாரா.

கடந்த நான்கு ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர் பிரபு தேவாவும் நயன்தாராவும்.

இந்தக் காதலுக்காக தனது மனைவியை விவாகரத்தும் செய்துவிட்டார் பிரபு தேவா. அவருக்கும் முன்னாள் மனைவி ரம்லத்துக்கும் பாகப்பிரிவினை கூட நடந்துவிட்டது.

திருமணத்துக்காக நயன்தாராவும் சினிமாவுக்கு முழுக்கு போட்டார். கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறினார்.

சினிமாவை விட்டு விலகியபோது நயன்தாரா உச்சத்தில் இருந்தார். அவர் தமிழில் கடைசியாக நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன். செம ஹிட். 'பிடிங்க ஒரு கோடி' சம்பளம் என்றபடி வந்த தயாரிப்பாளர்கள் எண்ணிக்கை கணக்கில்லை. ஆனால் அவர் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை.

தெலுங்கில் மட்டும் சீதை வேடம் போட்டார் ஸ்ரீராம ராஜ்ஜியம் என்ற படத்துக்காக. அந்தப் படமே தனது கடைசி படம் என்றார்.

ஆனால் எதிர்ப்பார்த்த ஒன்றும் நடக்கவே இல்லை. பிரபுதேவாவின் போக்கிலும் மாற்றம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. நயன்தாராவுடனான திருமணத்தை அவர் அறிவிக்கவே இல்லை. மாறாக தான் இயக்கிய எங்கேயும் காதல் படத்தில் நடித்த ஹன்சிகா மோத்வானியுடன் நெருக்கமாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் முன்னாள் மனைவி ரம்லத் மற்றும் குழந்தைகளுடனும் அவர் இணக்கமாக உள்ளாராம்.

இந்த விஷயங்கள் நயன்தாராவுக்கு தெரிய வர, இருவரும் பிரிந்தனர். இந்தப் பிரிவு சமாதானப்படுத்த முடியாத அளவுக்கு இப்போது பெரிதாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

தற்போது இருவரும் அமைதியாக பிரிவது என்று முடிவு எடுத்து பிரிந்து விட்டதாக நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

இதன்விளவைு... ஏற்கெனவே தெலுங்கில் நாகார்ஜுனா ஜோடியாக ஒரு ரொமான்டிக் படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக் கொண்டுள்ளார். இப்போது தமிழில் இரு புதிய படங்களுக்கு கதை கேட்டு வருகிறார். விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

English summary
The 4 years long love affair between Nayanthara and Prabhu Deva comes to an end. According to sources, the actress decided to continue her career in Tamil and Telugu and said a good bye to the actor - director.
Please Wait while comments are loading...