»   »  ஐஸ்வர்யாவின் அடுத்த 'கொல வெறி'யில் யுவன் சங்கர் ராஜா!

ஐஸ்வர்யாவின் அடுத்த 'கொல வெறி'யில் யுவன் சங்கர் ராஜா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சூப்பர் ஸ்டாரின் மகள், தனுசின் மனைவி, கஸ்தூரிராஜாவின் மருமகள் என பல அடையாளங்களைத் தாண்டி, '3' திரைப்படத்தை இயக்கியதன் மூலம் திரைத்துறையில் தனக்கென ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் ஐஸ்வர்யா.

நடிகர் தனுஷ் மற்றும் கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி நடித்த 3 திரைபடம், வசூலில் சாதனை படைத்ததுடன், ஓய் திஸ் கொல வெறி உட்பட அனைத்து பாடல்களையும் அமைத்த அறிமுகம் இசையமைப்பாளர் அனிருத்திற்கு பெரிய வெற்றியையும் தேடித் தந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா, தனது அடுத்த திரைப்படத்தை துவங்க தயாராகி வருவதாக தெரிகிறது. இந்த படத்திற்கும் அனிருத்தே இசையமைபப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

தனக்கு தானே சூனியம்

தனக்கு தானே சூனியம்

'3'ல் தன் கணவர் தனுஷை, கமல் ஹாசனின் மகள் ஸ்ருதியின் ஜோடியாக்கி, தனக்கு தானே சூனியம் வைத்துக்கொண்டார். தன் வாழ்க்கையை மீட்டெடுக்க போராடியதெல்லாம் தனிக்கதை.

நோ... தனுஷ்

நோ... தனுஷ்

இந்நிலையில்,சூடு கண்ட பூனையாக, வேறு ஹீரோவுக்குப் போய்விட்டார். இந்த படத்தின் ஹீரோ, கார்த்திக் மகன் கௌதம்.கௌதமின் ஜோடி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. யாராக இருந்தாலும் ஐஸ்வர்யாவுக்குப் பிரச்சினை இல்லையே...+

3க்கு அப்புறம் 4ஆ?

3க்கு அப்புறம் 4ஆ?

பெயர் வைக்கப்படாத இப்படத்தை, ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். பெயர் சூட்டப்படவில்லை இன்னும். ஆனால் 4 என்று பெயர் வைக்க மாட்டார் என்பது உறுதி. காரணம், வேறுஒரு படத்துக்கு அந்தப் பெயரை வைத்து விட்டார்கள்.

கொலைவெறி நாயகனுக்கு என்னாச்சு?

கொலைவெறி நாயகனுக்கு என்னாச்சு?

முக்கியமான மேட்டர் என்னவென்றால் கொலவெறி நாயகன் அனிருத் படத்தில் இல்லாததே. இதுதான் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

ஆண்ட்ரியா லிப்லாக் காரணமோ...

ஆண்ட்ரியா லிப்லாக் காரணமோ...

ஆண்ட்ரியாவுடன் லிப்லாக், காதல் உள்பட பல விஷயங்களில் கிசுகிசுக்கப்பட்டு, நொந்து நூடுல்ஸ் ஆனதால்தான் அனிருத்தை படத்தில் ஐஸ்வர்யா சேர்க்கவில்லையோ என்று பேச்சு அடிபடுகிறது.

இன்ப அதிர்ச்சி என்னன்னா...

இன்ப அதிர்ச்சி என்னன்னா...

இன்ப அதிர்ச்சி என்னன்னா, இந்த படத்திற்கு ‘தன் காதலைச் சொல்ல நேரம் இல்லாத ‘ யுவன் சங்கர் ராஜாதான் இசையமைக்கப் போகிறார்.

இசை விருந்து

இசை விருந்து

பிரதமர் விருந்து தர அளவுக்கு சாதனை செஞ்ச கொலைவெறி பாடல் போலவே, இதிலும் நிச்சயம் ஒரு பாடல் இருக்கும்னு எதிர்பார்ப்பில், ரசிகர்கள் இப்பவே ரொம்ப குஜாலாகி வருகிறார்கள்...

எப்படியும் தனுஷ் ஒரு பாட்டு எழுதுவார்.. அதை அவரே பாடவும் செய்யலாம்..கூடவே யுவனும் கம்பெனி கொடுக்கலாம்... எதிர்பார்ப்போம்!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Supestar Rajinikanth’s elder daughter is now ready to commence her next project which we hear is being produced by AGS Entertainment. While an official announcement is awaited on the cast and crew it is being speculated that ‘Kadal’ star Gautam Karthik might play the lead. But what has emerged as a pleasant surprise in the project is that Yuvan Shankar Raja has been confirmed as the music director. Considering the excellent music offered in ‘3’, one can expect another musical feast from Aishwarya Dhanush in her second film too.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more