»   »  பிக் பாஸில் இருந்து வெளியேறியதற்காக ஓவியாவுக்கு நன்றி சொன்ன நடிகர்

பிக் பாஸில் இருந்து வெளியேறியதற்காக ஓவியாவுக்கு நன்றி சொன்ன நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேறியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் ரகுமான்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை பலர் பார்க்க நடிகை ஓவியா தான் காரணம். ஓவியாவின் ஆதரவாளர்களில் நடிகர் ரகுமானும் ஒருவர். ஓவியாவுக்கு ஆதரவாக ட்வீட்டியும் வந்தார் ரகுமான்.

இந்நிலையில் ஓவியா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

ஓவியா ஆர்மி

ஓவியா ஆர்மி

ஓவியா வெளியேறிய கையோடு பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதை ஓவியா ஆர்மிக்காரர்கள் நிறுத்திவிட்டனர். நடிகர் ரகுமானும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதை நிறுத்தியுள்ளார்.

நன்றி

பிக் பாஸ் இல்லை. நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதற்காக ஓவியாவுக்கு நன்றி. நிகழ்ச்சியின் மீதான ஈர்ப்பு போயுள்ளது. தற்போது எனக்கு நிறைய நேரம் உள்ளது என்று ட்வீட்டியுள்ளார் ரகுமான்.

போட்டியாளர்கள்

இதை எதிர்பார்த்தேன் மச்சான், டைம் வேஸ்ட் என்றவருக்கு ரகுமான் அளித்த பதில், ஆமாம். கடவுளுக்கு நன்றி. அடிக்ஷன் அதிகமாக இருந்தது. பிற போட்டியாளர்களின் முகத்திற்காக எல்லாம் பார்க்க முடியாது என்றார்.

நீங்களுமா?

சார் நீங்களுமா? நல்ல முடிவு என்று ரகுமானின் ட்வீட்டை பார்த்த ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.

English summary
Actor Rahman tweeted that, 'No Big Boss. Thanks to #Oviya for quitting the show. Finally I got over the addiction of watching the show. Now I have lot of time to chill.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil