»   »  குடியரசு தினத்தன்று ஜனங்க மட்டுமில்ல... அவ்வளவா சினிமாவும் வரல!

குடியரசு தினத்தன்று ஜனங்க மட்டுமில்ல... அவ்வளவா சினிமாவும் வரல!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்த குடியரசு தின விழாவை சென்னை மக்கள் கிட்டத்தட்ட முழுசாகப் புறக்கணித்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் போலீசார் நிகழ்த்திய வன்முறை, மத்திய மாநில அரசுகள் திட்டமிட்டே தமிழ் மக்களை வஞ்சிக்கின்றன என்ற அதிருப்தி போன்றவைதான் இந்தப் புறக்கணிப்புக்குக் காரணம் என மீடியா அம்பலப்படுத்தி வருகிறது.


No big releases for this republic day

இந்த குடியரசுத் தினத்தை மக்கள் மட்டுமல்ல, திரையுலகமும்கூட புறக்கணித்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.


வழக்கமாக குடியரசுத் தினத்தன்று குறைந்தது நான்கு படங்களாவது வெளியாகிவிடும். ஆனால் இந்த முறை பெரிய படங்கள் ஒன்றுகூட ரிலீசாகவில்லை. ஒரே ஒரு சின்னப்படம் மட்டும்தான். அந்தப் படம் அதே கண்கள்.


No big releases for this republic day

கலையரசன், ஜனனி நடித்த இந்தப் படத்தை, ரோஹின் வெங்கடேசன் இயக்கியிருந்தார். இந்தப் படம் மட்டும்தான் நேற்று வெளியானது. வேறு புதிய படங்களே வெளியாகாததால், சென்னை போன்ற நகரங்களில் இந்திப் படங்களான காபில், ரீஸ் போன்றவற்றுக்கு கூட்டம் திரண்டது.

English summary
Athe Kangal is the only Tamil movie released on Republic Day.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil