»   »  பொங்கலுக்கு ஐ வராவிட்டாலும் கூட என்னை அறிந்தால் வராது!

பொங்கலுக்கு ஐ வராவிட்டாலும் கூட என்னை அறிந்தால் வராது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பொங்கலுக்கு ஒருவேளை ஐ படம் வராமலே போனாலும் கூட, அஜீத்தின் என்னை அறிந்தால் படம் வெளியாக வாய்ப்பு இல்லாத நிலைதான் உள்ளது.

பொங்கலுக்கு அதிக அரங்குகளில் ஷங்கர் இயக்கும் ஐ படம் வருவதாக இருந்தது. ஆனால் கடன் பிரச்சினை காரணமாக இந்தப் படத்தை மூன்று வாரத்துக்கு வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் படத்தை எப்படியாவது பொங்கலன்று கொண்டு வந்துவிடுவேன் என்று தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் கூறி வருகிறார். இன்னும் படத்துக்கு யு சான்று கிடைக்காததால் ஐ படம் வரும் என்பது பெரும்பாலானோர் நம்பவில்லை.

இந்த நிலையில், ஐ படம் அதிக அரங்குகளில் வெளியாவதால் தியேட்டர் பற்றாக்குறை வரும் என்றுதான் அஜீத்தின் என்னை அறிந்தால் படம் தள்ளிப் போனதாகக் கூறப்பட்டது. பின்னர் இன்னும் கொஞ்சம் வேலை பாக்கியிருக்கிறது என்றார்கள்.

ஒருவேளை ஐ படம் வரவில்லை என்பது உறுதியானால் என்னை அறிந்தால் வருமா..?

'நிச்சயம் வராது. காரணம், என்னை அறிந்தால் வராமல் போனதற்குக் காரணம், படத்தை இன்னும் சிறப்பாக மெருகேற்றித் தர வேண்டும் என்பதே. அதற்காகவே அஜீத், வேறு படத்துக்கு கொடுத்த கால்ஷீட்டைக் கூட என்னை அறிந்தால் படத்துக்கு கூடுதலாக ஒதுக்கிக் கொடுத்து பேட்ச் வொர்க் செய்துகொடுத்தார். எனவே இன்னும் வேலை பாக்கியிருப்பதால், என்னை அறிந்தால் படம் இம்மாத இறுதியில்தான் வெளியாகும்,' என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

English summary
There is no chance to the release of Yennai Arinthaal, even though I release suspended for Pongal.
Please Wait while comments are loading...