»   »  நாங்கள் சொல்வதைக் கேட்கும் யாருடனும் படப்பிடிப்பைத் தொடர்வோம்! - விஷால்

நாங்கள் சொல்வதைக் கேட்கும் யாருடனும் படப்பிடிப்பைத் தொடர்வோம்! - விஷால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நாங்கள் சொல்வதைக் கேட்கும் யாருடனும் படப்பிடிப்பைத் தொடர்வோம் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

தங்களுக்கு எதிரான போக்கைக் கடைப்பிடித்த தயாரிப்பாளர் சங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆகஸ்ட் 1ம் தேதியிலிருந்து நேற்று வரை வேலை நிறுத்தம் செய்து வந்தது ஃபெப்சி அமைப்பு. திரைத் துறையின் மூத்த நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பலர் வலியுறுத்தியதால் நேற்று வேலை நிறுத்தத்தை தானாக முன்வந்து விலக்கிக் கொண்டது ஃபெப்சி.

No Change in our stand in Fefsi issue - Vishal

ஆனால் விஷால் தலைமையில் இயங்கும் தயாரிப்பாளர் சங்கமோ, தன் நிலையிலிருந்து இறங்கி வரவில்லை. இப்போதும் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே தயாரிப்பாளர் சங்கம் இருந்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:

தற்போது நடந்துவரும் திரைத்துறை சார்ந்த குழப்பங்களுக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எவ்வகையிலும் காரணமல்ல.

இந்நிலையில்,
* தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்கனவே எடுத்த முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை.
* தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நிர்ணயித்த சம்பள விதிகளுக்கு உட்பட்ட யாருடனும் படப்பிடிப்பைத் தொடர்வோம்.
* பெப்சி தொழிலாளர்களை மட்டுமே பணியில் அமர்த்துமாறு நிர்பந்திக்க யாருக்கும் உரிமையில்லை.
* தொழிலாளர் நலவாரிய அழைப்பை ஏற்று இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டபின் அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும்.

English summary
In a statement, Producers Council announced that there is no change in their stand in Fefsi issue.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil