»   »  சென்னையில் பெய்து வரும் கன மழையால் தியேட்டர்களில் நீர்த்துப் போன கூட்டம்

சென்னையில் பெய்து வரும் கன மழையால் தியேட்டர்களில் நீர்த்துப் போன கூட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் தியேட்டர்களில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் மிகுந்த சோகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் சென்னை மாநகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. எங்கு திரும்பினாலும் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

No crowds in theatres due to heavy rain in Chennai

வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் சென்னை வடபழனி, வேளச்சேரி, ராயப்பேட்டை, அமைந்த கரை, மயிலாப்பூர் பகுதிகளில் உள்ள வணிக வளாகங்களில் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழியும்.

குறிப்பாக வணிக வளாகங்களில் உள்ள தியேட்டர்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆனால் நேற்று காலை முதல் தொடர் மழை பெய்து வருவதால் வணிக வளாகங்களில் உள்ள தியேட்டர்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

மேலும் கூட்டம் அதிக அளவில் சுற்றிப் பார்க்க செல்லும் வண்டலூர் பூங்காவில் பொதுமக்களின் நடமாட்டம் இன்றி களை இழந்து காணப்பட்டது.

அதேபோல் கிண்டி சிறுவர் பூங்கா, மெரினா கடற்கரை பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் இல்லை. மெட்ரோ ரெயிலிலும் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

English summary
No crowds in theatres due to heavy rain in Chennai.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil