»   »  படு செக்ஸி படம்.... ஆனா நோ கட்... சென்சார் அதிகாரி படம்னா ஸ்பெஷல் சலுகையா?

படு செக்ஸி படம்.... ஆனா நோ கட்... சென்சார் அதிகாரி படம்னா ஸ்பெஷல் சலுகையா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ராய் லட்சுமி இந்தியில் படு செக்ஸியாக நடித்துள்ள ஜூலி 2 படத்துக்கு எந்தக் கட்டும் தராமல் ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். முன்னாள் சென்சார் அதிகாரி தயாரித்த படம் என்பதால் இந்த சலுகை தரப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

'ஜூலி-2' படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ளார் ராய் லட்சுமி. டாப்லெஸ், பிகினி என பல கவர்ச்சி உடைகளில் அவர் தோன்றிய புகைப்படங்கள் இணைய தளங்களில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பின.

செக்ஸியான காட்சிகள்

செக்ஸியான காட்சிகள்

இந்த படத்தில் படுக்கையறைக் காட்சிகள், முத்தக் காட்சிகள் நிறைய இருப்பதாகக் கூறப்பட்டது. எனவே நிச்சயம் படத்தில் காட்சிகள் தூக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

தணிக்கை

தணிக்கை

இந்த நிலையில், ‘ஜூலி-2' தணிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் இதற்கு ‘ஏ' சான்றிதழ் வழங்கி உள்ளனர். இந்த படத்தின் எந்த காட்சிக்கும் ‘கட்' கொடுக்கவில்லை. வசனம் உள்பட எதையும் நீக்கச்சொல்லவில்லை.

தீபக் சிவதாஷினி இயக்கியுள்ள இந்த படத்தை சென்சார் போர்டு முன்னாள் தணிக்கை அதிகாரி பஹ்லஜ் நிகாலானி, விஜய் நாயர் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

முன்னாள் தணிக்கை குழு அதிகாரி

முன்னாள் தணிக்கை குழு அதிகாரி

பஹ்லஜ் நிகாலானி முன்னாள் தணிக்கை குழு அதிகாரி. இவரது படம் என்பதால்தான் இந்த ஒருதலைப்பட்சமான சான்று வழங்கியுள்ளனர் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பஹ்லஜ் நிகாலானி பதில்

பஹ்லஜ் நிகாலானி பதில்

ஆனால் பஹ்லஜ் நிகாலானி, "இந்த படத்துக்கு ‘ஏ' சான்றிதழ் கிடைக்கும் என்று நினைத்தேன். அது நடந்துள்ளது. எந்த ‘கட்'டும் கொடுக்கவில்லை. இது வயது வந்தவர்கள் மட்டும் பார்க்ககூடிய படம். நிர்வாண காட்சிகளோ, இரட்டை அர்த்த வசனங்களோ கிடையாது. சென்சார் போர்டு தங்கள் பணியை சரியாகவே செய்திருக்கிறார்கள்.. இதில் பாரபட்சம் இல்லை," என்று பதிலளி்த்துள்ளார்.

English summary
The censor board has issues a clean A certificate without any cuts to sexy movie Julie 2.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil