»   »  முடிவுக்கு வராத சினிமா ஸ்ட்ரைக் பேச்சுவார்த்தை!

முடிவுக்கு வராத சினிமா ஸ்ட்ரைக் பேச்சுவார்த்தை!

Posted By:
Subscribe to Oneindia Tamil
சினிமா ஸ்ட்ரைக் முடியுமா?..முடியாதா?- வீடியோ

தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் என அனைத்துக்கும் சொந்த அலுவலகங்கள் இருக்கின்றன. இருப்பினும் நேற்று மாலை சென்னை காஸ் மோபாலிட்டன் கிளப்பில் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர் பங்கேற்ற முத்தரப்பு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் தயாரிப்பாளர்கள்சங்கத்தின் தலைவர் விஷால், பிரபு, துரைராஜ்
தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ரோகிணி பன்னீர் செல்வம், அபிராமி ராமநாதன், விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் அருள்பதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

No decision taken at cinema strike talks

இந்த வேலை நிறுத்தத்திற்கு காரணமாக இருக்கும் டிஜிட்டல் நிறுவனங்களுக்கு ஆதரவு குரல் கொடுத்து வருபவரும், கோவை ஏரியாவில் 70 தியேட்டர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள திருப்பூர் சுப்பிரமணி கலந்து கொள்ள தயாரிப்பாளர்கள் சங்க தரப்பில் தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் எந்த கோரிக்கைக்கும் சமரசமான முடிவுக்கு வர தியேட்டர்கள் சங்க தரப்பில் ஒப்புதல் இல்லாததால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. அடுத்த வாரம் புதன்கிழமை மீண்டும் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

தயாரிப்பாளர்கள் சங்க தரப்பு இப்பிரச்சினைக்கு தீர்வு காண நீதிமன்றத்தை நாட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

தியேட்டர் நடத்துவதற்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகளை தியேட்டர் நிர்வாகம் செய்ய வேண்டும், அப்படி நிறைவேற்றாத தியேட்டர்களின் உரிமத்தை ரத்து செய்யுமாறு கேட்கும் உரிமை தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு இருப்பதால் இடியாப் பசிக்கலில் தியேட்டர்கள் சிக்கும் அபாயம் உள்ளது.

English summary
There was no final decision taken at the cinema strike talks happened in yesterday and next round talks will resume on Wednesday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X