twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இன்னிக்கு 'ஷோ' இல்ல!

    By Shankar
    |

    Strike
    மத்திய அரசின் சேவை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று இந்தியா முழுவதும் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன.

    ஆனால் மல்டிப்ளெக்ஸ்கள் இந்த முடிவை எதிர்ப்பதால், அவற்றில் மட்டும் காட்சிகள் இருக்கும் என்கிறார்கள்.

    சினிமா தொழிலுக்கு 10.3 சதவீத சேவை வரியை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை அனைத்து மொழி சினிமாக்காரர்களும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

    தமிழ் திரைப்படத் துறையின் அனைத்துப் பிரிவினரும் சேவை வரியை எதிர்த்து நடக்கும் போராட்டத்துக்கு முழு ஆதரவு அளித்துள்ளனர்.

    இன்று ஒரு நாள் மட்டும் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக திரையரங்கு உரிமையாளர் சம்மேளனத் தலைவர் அபிராமி ராமநாதன் அறிவித்துள்ளார். திரையரங்கு உரிமையாளர்களின் மற்றொரு அமைப்பின் நிர்வாகியான திருச்சி ஸ்ரீதரும் இதே அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

    ஆனால் மும்பை போன்ற சில நகரங்களில் உள்ள மல்டிப்ளெக்ஸ் அரங்குகள் மட்டும் இந்த ஸ்ட்ரைக்கில் பங்கேற்க மறுத்துள்ளன.

    English summary
    There will be no shows in cinema theatres across India on February 23. This is to protest against the centres move to impose service tax on cinema industry.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X