»   »  மஸ்திஜாதே.... படம் முழுக்க.. ஒரே "பீப் பீப்".. வேற எதுவுமே இல்லை!

மஸ்திஜாதே.... படம் முழுக்க.. ஒரே "பீப் பீப்".. வேற எதுவுமே இல்லை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ரொம்பப் பேசப்பட்ட, சிலாகிக்கப்பட்ட, கிசுகிசுக்கப்பட்ட மஸ்திஜாதே ஒரு வழியாக ரிலீஸாகி விட்டது. படம் முழுக்க சன்னி லியோன் மட்டுமே நிற்கிறார்... அல்ல அல்ல.. கவர்ச்சி காட்டி களியாட்டம் போட்டுள்ளார். அதைத் தவிர வேறு ஒரு மண்ணும் இப்படத்தில் இல்லை என்பதுதான் ஆகச் "சிறந்த" விஷயமாக இதில் இடம் பெற்றுள்ளது.

படம் முழுக்க சன்னி லியோனின் உடல் அழகைத்தான் விதம் விதமாக டிசைன் டிசைனாக ஷோகேஸ் செய்துள்ளனர். சும்மா சொல்லக் கூடாது படத்தில் அனு அனுவாக சன்னி லியோனின் "டீட்டெய்லை" டீட்டெய்லாக விவரித்துக் காட்டியுள்ளனர்.

சன்னி லியோனின் முழு அழகையும் சரியான கொள்ளளவில் படம் முழுக்க கொட்டி நிரப்பியுள்ளார் இயக்குநர். அவரது கவர்ச்சியை எந்தெந்த கோணத்தில் காட்ட முடியும் என்று மட்டுமே ஸ்டோரி டிஸ்கஷனில் அதிகமாக விவாத்திருப்பார்கள் போல.. அவ்வளவு பர்பெக்ட்டாக இருக்கிறது "சீன்கள்" எல்லாம்.

லைலா.. லில்லி

லைலா.. லில்லி

படத்தில் சன்னிக்கு இரட்டை வேடம். லைலா மற்றும் லில்லி. இருவரையும் பாரபட்சமே இல்லாமல் கவர்ச்சிக் களியாட்டம் போட வைத்திருக்கிறார் இயக்குநர்.

ஜோக்ஸ் நிறைய

ஜோக்ஸ் நிறைய

பிறகு படம் முழுக்க நிறைய ஜோக்ஸ் இருக்கிறது. உண்மையிலேயே சிரிக்கவும் வைக்கிறது. அதுதான் இங்கு முக்கியம்.

வாழைப்பழ ஜோக்ஸ்

வாழைப்பழ ஜோக்ஸ்

துஷார் கபூருக்கு சன்னி கெலே என்ற கேரக்டரைக் கொடுத்து உலா வர விட்டுள்ளனர். அதை வைத்து நிறைய வாழைப்பழ விவகாரத்தை அள்ளித் தெளித்துள்ளனர். இந்தப் படத்தைப் பார்க்கும் யாருமே வாழைப்பழத்தை சாப்பாட்டு விஷயமாகவே இனிமேல் நினைக்க முடியாது.. அப்படி காட்டியுள்ளனர்!

வீர் தாஸின் சேட்டை

வீர் தாஸின் சேட்டை

உடல் உறுப்புகளை வைத்து நிறைய வசனங்கள். வீர் தாஸ் கேரக்டரை சொல்லாமல் விட முடியாது.. அவர் செய்யும் சேஷ்டைகளை சொல்லவும் கூடாது!

செக்ஸ் அடிமைகள்

செக்ஸ் அடிமைகள்

இந்த வீர் தாஸும், துஷார் கபூரும் செக்ஸ் அடிமைகள். இவர்களுக்கும், சன்னி லியோனுக்குமான "என்கவுண்டர்கள்"தான் படத்தின் கதை.

ரிதீஷ்

ரிதீஷ்

ரிதீஷ் தேஷ்முக்கும் படத்தில் வந்து போகிறார். ஆண்களுக்கு ஏற்படும் உச்சநிலை குறித்து சின்னதாக ஒரு பிளாஷ் அடித்து விட்டுப் போகிறார். அவர் பேசுவதற்கு நிறைய "பீப்" போட வேண்டியிருக்கிறது.

பீப் பீப்

பீப் பீப்

அதை விட பெரிய காமெடி படம் முழுக்க பீப் பீப்தான்.. யாருமே வசனத்தை முழுதாக சொல்லி முடிக்க முடிவதில்லை. அப்படி எல்லாம் பீப் மயம். சிம்பு பாடியதெல்லாம் இந்தப் படத்திற்கு முன்னாடி ஜுஜுபி.

காமநெடி

காமநெடி

செக்ஸ் கலந்த காமெடிப் படம் என்று கூறி விட்டு செக்ஸியான காமெநெடியை ஓவராக கலந்து விட்டார்கள்.

இத்தனை இருந்தும் சன்னி லியோனுக்காக படத்தைப் பார்த்து ரசிக்கலாம்.. ஆனால் அவரது நடிப்புக்காக அல்ல பாஸ்..!

English summary
No funny business, because this is Sunny movie. The former porn star has showcased her full beauty and glamour in this movie, Mastizaade.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil