»   »  நான் பிட்டு படம் மட்டுமே எடுப்பேன் என நினைத்துவிட்டனர்: சிம்பு பட இயக்குனர்

நான் பிட்டு படம் மட்டுமே எடுப்பேன் என நினைத்துவிட்டனர்: சிம்பு பட இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: என் முதல் படத்திற்கு பிறகு எந்த நடிகரும் என் படத்தில் நடிக்க விரும்பவில்லை. நான் பிட்டு படங்கள் மட்டுமே எடுப்பேன் என்று பலரும் நினைத்துவிட்டனர் என்று இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சிம்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்பு நான்கு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.


இந்நிலையில் படம் குறித்து ஆதிக் கூறும்போது,


ஹீரோக்கள்

ஹீரோக்கள்

என் முதல் படத்திற்கு பிறகு எந்த நடிகரும் என் படத்தில் நடிக்க விரும்பவில்லை. நான் பிட்டு படங்கள் மட்டுமே எடுப்பேன் என்று பலரும் நினைத்துவிட்டனர். இந்நிலையில் தான் சிம்பு என் படத்தில் நடிக்க முன் வந்தார்.
தயாரிப்பாளர்கள்

தயாரிப்பாளர்கள்

த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்திற்கு பிறகு பல தயாரிப்பாளர்கள் என் அடுத்த படத்தை தயாரிக்க முன்வந்தனர். ஆனால் ஹீரோக்கள் தான் என் படத்தில் நடிக்க தயாராக இல்லை.
சிம்பு

சிம்பு

த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தை எடுத்தபோதில் இருந்து சிம்பு என்னை ஊக்குவித்து வந்தார். இறுதியில் அவர் தான் என் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.


சர்ச்சை

சர்ச்சை

சிம்பு எப்பொழுது பார்த்தாலும் ஏதாவது சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார். என் முதல் படத்திற்கு பிறகு நானும் சர்ச்சையில் சிக்கினேன். நாங்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றுகிறோம் என்பதால் வித்தியாசமான தலைப்பு வைத்தோம்.


ஏஏஏ

ஏஏஏ

ஏஏஏ படம் அடல்ட் ஒன்லி படம் இல்லை. ரஜினிக்கு அண்ணாமலை., விஜய்க்கு திருமலை போன்று எஸ்டிஆருக்கு ஏஏஏ. த்ரிஷா இல்லனா நயன்தாரா மாதிரி இல்லாமல் இது கமர்ஷியல் என்டர்டெய்னர் என்றார் ஆதிக்.


English summary
AAA director Adhik Ravichandran said that many heroes in the industry thought he could direct only bittu padam after seeing Trisha Illana Nayanthara.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil