தளபதி 67 படத்துக்காக விஜய் எடுத்த துணிச்சலான முடிவு: ரசிகர்களுக்கு இது கொஞ்சம் ஷாக்கிங் அப்டேட் தான்

சென்னை: தமிழ்த் திரையுலகின் இளைய தளபதி விஜய் தற்போது 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார்.

Recommended Video

Vijay எடுத்த துணிச்சலான முடிவு, ரசிகர்களுக்கு இது Shocking Update தான்

இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தளபதி 67' படத்தில் நடிக்கவுள்ளார்.

'தளபதி 67' படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், சூப்பரான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

வாரிசு படத்தில் பிஸியாக இருக்கும் விஜய்

வாரிசு படத்தில் பிஸியாக இருக்கும் விஜய்

'பீஸ்ட்' படத்திற்குப் பின்னர் 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார் விஜய். வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஷாம், சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகிபாபு, சங்கீதா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். விஜய் இருவேடங்களில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. முதன்முறையாக விஜய் படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

தளபதி 67க்கு ரெடியான விஜய், லோகேஷ்

தளபதி 67க்கு ரெடியான விஜய், லோகேஷ்

'வாரிசு' படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து தனது 67வது படத்திற்கு ரெடியாகிவிட்டார் விஜய். 'விக்ரம்' படத்தின் மெஹா ஹிட்டால் உற்சாகமாக உள்ள லோகேஷ் கனகராஜ், விஜய்க்கும் தரமான ஸ்கிரிப்ட்டை தயார் செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. ஸ்கிரிப்ட்டை முழுமையாக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

மும்பை கேங்ஸ்டராக விஜய்?

மும்பை கேங்ஸ்டராக விஜய்?

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி மிரட்டியிருப்பார். ஆனால், தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லனாக 6 பேர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கெளதம் மேனன், சஞ்சய் தத், பிருத்விராஜ், அர்ஜுன், மன்சூர் அலிகான் ஆகியோரின் பெயர்கள் இதுவரை லிஸ்ட்டில் உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், சமந்தாவும் மாஸான நெகட்டிவ் ரோலில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முக்கியமாக இந்தப் படத்தில் விஜய் மும்பை கேங்ஸ்டராக வித்தியாசமான லுக்கில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

விஜய்க்கு ஹீரோயின் யார்?

விஜய்க்கு ஹீரோயின் யார்?

சினிமாவில் 30 ஆண்டுகளாக நடித்து வரும் விஜய், தனது படங்களில் ஹீரோயினுக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுப்பார். இவர் கெஸ்ட் ரோலில் நடித்த 'சுக்ரன்' படத்தில் மட்டும் சிங்கிளாக வந்து கலக்கியிருப்பார். இந்நிலையில், 'தளபதி 67' படத்தில் விஜய்க்கு ஜோடியாக யாரும் நடிக்கவில்லை என்றும், அதேபோல் பஞ்ச் வசனங்கள் எதுவும் கிடையாது எனவும் சொல்லப்படுகிறது. ஹீரோயின், பஞ்ச் வசனங்களில் அதிக ஆர்வம் காட்டும் விஜய், லோகேஷின் இந்த முடிவுக்கு எப்படி சம்மதம் சொன்னார் என ரசிகர்கள் பேசி வருகின்றனர். அதேநேரம் லோகேஷின் இயக்கத்தில் ரசிகர்களுக்கு அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X