தளபதி 67.. சமந்தா வில்லியாம்.. அப்போ ஹீரோயின் யாரு தெரியுமா? செல்லம்மா பேரு அடிபடுதே!

சென்னை: வாரிசு படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்து அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படம் வெளியாக உள்ள நிலையில், அடுத்ததாக தளபதி 67 படம் குறித்த எதிர்பார்ப்புகள் பெருக தொடங்கி இருக்கின்றன.

தளபதி 67 படத்தில் நடிகை ஒருவரை வில்லியாக விஜய்க்கு எதிராக நிறுத்தலாம் என்கிற முடிவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சிந்தித்து வருவதாக தகவல்கள் வெளியானதும், சமந்தா தான் அதற்கு சரியான தேர்வாக இருப்பார் எனக் கூறினர்.

இந்நிலையில், ஹீரோயினாக அந்த செல்லம்மாவை அப்படியே அலேக்கா தூக்கிட்டு வாங்கடா என லோகேஷ் கனகராஜ் சொல்லியிருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராஷ்மிகா மந்தனா ஜோடி

ராஷ்மிகா மந்தனா ஜோடி

மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன், பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே, வாரிசு படத்தில் ராஷ்மிகா மந்தனா என அடுத்தடுத்த படங்களில் புதிய புதிய ஹீரோயின்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார் நடிகர் விஜய். வம்சி இயக்கத்தில் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள வாரிசு படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் பட்டாசு பட ஹீரோயின் மெஹ்ரீன் பிர்சடா என டோட்டலாக புதிய காம்போ இடம்பெற்று இருக்கிறது. இந்நிலையில், தளபதி 67 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கப் போகுது என்கிற கேள்வி எழுந்துள்ளது.

சமந்தா வில்லியா

சமந்தா வில்லியா

படையப்பா படத்தில் ரஜினிக்கு எதிராக நீலம்பரி எனும் கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் மாஸ் காட்டி இருப்பார். அதே போல ஒரு வெயிட்டான ஃபீமேல் கதாபாத்திரத்தை உருவாக்க இயக்குநர் லோகேஷ் கனகராஜும் திட்டமிட்டு வருவதாக சில பேட்டிகளில் சொன்ன நிலையில், தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லியாக சமந்தா நடித்தால் நல்லா இருக்கும் என ரசிகர்களே எதிர்பார்ப்புகளை கிளப்பி விட்டுள்ளனர். கத்தி, மெர்சல், தெறி உள்ளிட்ட படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்த சமந்தா அவருக்கு வில்லியாக நடித்தால் நல்லாத்தான் இருக்கும் என கோலிவுட் வட்டாரமும் எதிர்பார்த்து வருகிறது.

கியாரா அத்வானி கிடையாது

கியாரா அத்வானி கிடையாது

பாலிவுட் ஹீரோயின் கியாரி அத்வானியை விஜய்க்கு ஜோடியாக்க மாஸ்டர் படத்தில் இருந்தே முயற்சிகள் நடைபெற்று வருகிறது. ஆனால், அடுத்தடுத்து இயக்குநர் ஷங்கரின் பிரம்மாண்ட படங்களில் கமிட் ஆகி உள்ள கியாரா அத்வானி இப்போதைக்கு ஃப்ரீயாக இல்லை என்பதால், வேறு ஒரு ஹீரோயினை ஒப்பந்தம் செய்ய படக்குழு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரியங்கா மோகன் ஜோடியா?

பிரியங்கா மோகன் ஜோடியா?

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான பிரியங்கா மோகன், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து டான் உள்ளிட்ட படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ஹிட் அடித்து வரும் நிலையில், அடுத்ததாக ரஜினியின் ஜெயிலர் படத்திலும் நடிக்கப் போகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், தளபதி 67 படத்திலும் அவர் தான் விஜய்க்கு ஜோடி என பரபரப்பான தகவல் ஒன்று உலா வருகிறது. விரைவில், தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் போது யார் விஜய்க்கு ஜோடி என்பது உறுதியாகிவிடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X