விக்ரம் ஆடியோ வெளியீட்டு விழாவை பார்க்க இது ஒன்னு தான் வழி...இதையும் எதிர்பார்க்கலியே

சென்னை : கமலின் விக்ரம் ஆடியோ வெளியீட்டிற்காக ரசிகர்கள் செம உற்சாகமாக காத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் செம அப்செட்டில் இருக்கிறார்கள்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள விக்ரம் படம் ஜுன் 3 ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் ஆடியோ மற்றுள் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது. இந்த விழாவை ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

 உச்சபட்ச எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

உச்சபட்ச எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

விக்ரம் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு ரஜினி, விஜய், சூர்யா மூன்று பேரும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாக கூறப்படுவதால் அது பற்றி அறிவிப்பு வெளியாகலாம் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எதிர்பாராததை எதிர்பாருங்கள் என சொல்லி வருவதால் பல தரமான சம்பவங்கள் காத்திருக்கிறது என ரசிகர்கள் உச்சபட்ச எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

இவர் வருவது கன்ஃபார்ம்

இவர் வருவது கன்ஃபார்ம்

ஆனால் இதுவரை கிடைத்துள்ள தகவலின் படி, இந்த விழாவில் சூர்யா கலந்து கொள்ள போவதில்லையாம். விஜய் கலந்து கொள்ள உள்ளது உறுதியாகி உள்ளது. விஜய் கலந்து கொள்வதை நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ள டிடி கன்ஃபார்ம் செய்துள்ளார். அதோடு மாலை 5 மணிக்கு இவ்விழாவில் கலந்து கொள்ள விஜய் வருவார் என கூறப்படுகிறது.

என்னது லைவ் கிடையாதா

என்னது லைவ் கிடையாதா

இதுவரை வெளியான தகவல்கள் ரசிகர்களை குஷிப்படுத்தினாலும், அதிர்ச்சி தகவல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்கள். விக்ரம் ஆடியோ வெளியீட்டு விழா எந்த சேனலிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லையாம். அதனால் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களை தவிர மற்றவர்கள் விழாவை நேரடியாக பார்க்க முடியாதாம்.

அப்போ எப்படி பார்ப்பது

அப்போ எப்படி பார்ப்பது

விக்ரம் ஆடியோ விழாவின் ஒளிபரப்பு உரிமத்தை விஜய் டிவி தான் மிகப் பெரிய தொகை கொடுத்து வாங்கி உள்ளதாம். மே 22 ம் தேதி, அதாவது அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பகல் 3 மணிக்கு துவங்கி விக்ரம் ஆடியோ வெளியீட்டு விழா விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாம். இதனால் இந்த வாரம் விஜய் டிவியில் எந்த லைவ் நிகழ்ச்சியும் கிடையாதாம்.

அத்தனை நாள் காத்திருக்கனுமா

அத்தனை நாள் காத்திருக்கனுமா

விக்ரம் ஆடியோ நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள். என்ன நடக்கிறது, யாரெல்லாம் என்ன பேச போகிறார்கள், ரஜினி கலந்து கொள்வாரா, ரஜினி கலந்து கொண்டால் ரஜினி - கமல் சந்திப்பு எப்படி இருக்கும், ரஜினி, கமல், விஜய் ஆகியோர் ஒரே மேடையில் தோன்ற போகிறார்களா, இன்னும் வேறு என்ன அறிவிப்பு வெளியாக உள்ளது என்பது போன்ற பல கேள்விகளை ரசிகர்கள் முன் வைத்து வருகிறார்கள். ஆனால் இவற்றை வீடியோவாக பார்க்க வேண்டுமானால் அடுத்த வாரம் வரை காத்திருக்க வேண்டுமாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X