நோ மீன்ஸ் நோ.. எங்கே வேணுமோ அங்கு ஃபுல் ஸ்டாப் வச்சுடணும்.. என்னதான் நடந்துச்சு.. வனிதா ஆவேசம்!
சென்னை: பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து விலகிய கையோடு நடிகை வனிதா பதிவிட்டுள்ள ட்வீ ட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
சர்ச்சைகளுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாதவர் நடிகை வனிதா விஜயகுமார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதில் சக போட்டியாளர்களுடன் சண்டை சச்சரவு என்று இருந்தார். இருந்தாலும் இதன் மூலம் பெரும் பிரபலமானார் வனிதா.

படங்களில் பிஸி
அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு, பிக்பாஸ் ஜோடிகள் என பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் நடிகை வனிதா. தொடர்ந்து பட வாய்ப்புகளும் கிடைத்ததால் படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

வனிதாவுக்கு பாராட்டு
பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் காளி வேடமிட்டு அவர் நடனமாடியுள்ளார். அவரின் காளி கெட்டப் போட்டோக்கள் இணையத்தில் வைரலானது. நடிகைகள் அம்பிகா, ரேகா என பலரும் வனிதாவின் கெட்டப்பை பார்த்து பாராட்டினர்.

காவிய காதல் பாடல்
இந்நிலையில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியானது. இதில் காவிய காதல் பாடலுக்கு தனது ஜோடியான சுரேஷ் சக்கரவர்த்தியுடன் இணைந்து நடனமாடினார் வனிதா.

வெளியேறுவதாக அறிவிப்பு
அதில் வனிதாவின் பர்ஃபாமன்ஸை நிகழ்ச்சியின் நடுவரான ரம்யா கிருஷ்ணன் பாராட்டினார். இந்நிலையில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக வனிதா நேற்று அறிவித்தார்.

யாருடன் பிரச்சனை?
இதனை பார்த்த ரசிகர்கள் ரம்யா கிருஷ்ணனுடன் வனிதாவுக்கு லடாய் ஏற்பட்டதாக கருத்து பதிவிட்டு வருகின்றனர். பலரும் என்ன பிரச்சனை? யார் என்ன சொன்னார்கள் என்று கேட்டு வருகின்றனர்.

நோ மீன்ஸ் நோ
இந்நிலையில் வனிதா பதிவிட்டுள்ள ட்வீ ட் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, பெண்கள் துஷ்பிரயோகத்துக்கும் துன்புறுத்தலுக்கும் எதிராக நிற்க வேண்டும். நோ மீன்ஸ் நோ.. தேவைப்படும் இடத்தில் ஃபுல் ஸ்டாப் வைக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு நடிகை வனிதா பதிவிட்டுள்ளார்.

உங்களுக்கு செட் ஆகாது
இதனை பார்த்த ரசிகர்கள், நீங்கள் சொல்வதை ஒப்புக்கொள்கிறோம். துஷ்பிரயோகத்திற்கு எதிராக எழுந்து நிற்பது நல்லது! இது எல்லா பெண்களுக்கும் சாத்தியமில்லை! ஆனால் உங்களைப் போன்ற வெளிப்படையாக பேசுபவர்கள் எப்போதும் மோசமானவர்களாகவே இருப்பார்கள்! என பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











