»   »  'இந்த மாதிரி தயாரிப்பாளர்கள் இருந்தால் இப்படித்தான் 'சீன்' வைப்பார் கார்த்திக் சுப்பராஜ்!'

'இந்த மாதிரி தயாரிப்பாளர்கள் இருந்தால் இப்படித்தான் 'சீன்' வைப்பார் கார்த்திக் சுப்பராஜ்!'

Posted By:
Subscribe to Oneindia Tamil

இறைவி படம் வெளியானதிலிருந்து ஏகப்பட்ட சத்தம் கோடம்பாக்கம் பக்கம். குறிப்பாக தயாரிப்பாளர்கள் மத்தியில்.

கா.சு. தயாரிப்பாளர்களைக் காயப்படுத்திவிட்டார்... அவமானப்படுத்திவிட்டார் என தயாரிப்பாளர்கள் ஒரு பக்கம் கொதிக்க, அவர்களுக்காகவே ஒரு இறைவி ஷோ காட்டினார் அதன் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஞானவேல் ராஜா. கூடவே தயாரிப்பாளர் குழு ஒன்றுக்கு அவர் அனுப்பியிருந்த வாட்ஸ்ஆப் ஆடியோவில் கார்த்திக் சுப்பராஜுக்கு எதிராகப் பேசியிருந்தார்.


'No mistake on Karthik Subbaraj in Iraivi issue'

உண்மையில் இந்த இறைவியை எடுத்து திரைக்குக் கொண்டு வருவதற்குள் கார்த்திக் சுப்பராஜ் பாடுதான் பெரும்பாடாகிவிட்டது என்கிறார்கள் இதே தயாரிப்பாளர்கள் சிலர்.


அவர் கேட்ட எதையுமே அத்தனை சுலபத்தில் கொடுக்கவில்லையாம் இறைவி தயாரிப்பாளர்கள், குறிப்பாக சிவி குமார். படாதபாடு படுத்தினார் என்பதுதான் இப்போதைய பகிரங்க பேச்சு.


"இந்தப் படம் தயாரித்த சிவி குமாரும் சரி, ஞானவேல் ராஜாவும் சரி... அத்தனை சுலபத்தில் யாருக்கும் வாய்ப்புத் தந்துவிடுபவர்கள் அல்ல. பக்கா ஸ்க்ரிப்ட் இருந்தால்தான் தருவார்கள். கார்த்திக் சுப்பராஜும் முழு பவுண்டட் ஸ்க்ரிப்டைக் கொடுத்துதான் தயாரிப்பாளர்களிடம் வாய்ப்புப் பெற்றிருக்கிறார். அப்போது தெரியாதா படத்தில் தயாரிப்பாளர்களுக்கு எதிராக இந்த மாதிரி காட்சிகள் வருவது?


படம் வந்த பிறகு தயாரிப்பாளர்களை அவமானப்படுத்துவதாக குரல் எழுந்த உடனே, எப்படியாவது அந்த பப்ளிசிட்டியில் படம் இன்னும் பரபரப்பாக ஓடட்டும் என்பதுதான் ஞானவேல் ராஜா போன்றவர்களின் எண்ணம். அது தெரிந்ததால்தான் இப்போது தயாரிப்பாளர்கள் சைடில் பேரமைதி", என்கிறார், இறைவி ஷோ பார்த்த ஒரு தயாரிப்பாளர்.


கார்த்திக் சுப்பராஜ் பட்ஜெட்டை இழுத்துவிட்டார் என்று ஒரு குற்றச்சாட்டை ஞானவேல் ராஜா முன்வைத்திருந்தார்.


"அது உண்மை அல்ல.. இந்தப் படத்துக்கு பட்ஜெட் 10 கோடி சொல்லியிருந்தார் கார்த்திக் சுப்பராஜ். ஆனால் 7 கோடி ரூபாயிலேயே முடித்துவிட்டார். படத்தை நல்ல விலைக்கும் விற்றுவிட்டனர். ஓபனிங்கும் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் சிவி குமாருக்கு தன்னால் அறிமுகமான ஒரு இயக்குநருக்கு இவ்வளவு சம்பளம் கொடுப்பதா என்ற கடுப்பு. அதனால்தான் கார்த்திக் சுப்பராஜ் காலை வாருகிறார்," என்கிறார் இறைவி யூனிட்டைச் சேர்ந்த ஒருவர்.


பண விஷயம் உள்பட கார்த்திக் சுப்பராஜ் கேட்ட எதற்கும் அத்தனை சுலபத்தில் அனுமதி கொடுக்கவில்லையாம் சிவி குமார். "இவரை மாதிரி தயாரிப்பாளர்களிடம் மாட்டிய பிறகு இப்படித்தான் சீன் வைக்க முடியும் கார்த்திக் சுப்பராஜ் போன்ற இயக்குநர்களால். அதில் தவறுமில்லை," என்கிறார் சனிக்கிழமை மாலை தயாரிப்பாளர் ஷோ பார்த்த இன்னொரு தயாரிப்பாளர்.


ஆக, கார்த்திக் சுப்பராஜ் மீது தவறில்லை என்பதை தயாரிப்பாளர்கள் தரப்பே ஒப்புக் கொள்கிறது!

English summary
Iraivi issue takes a U turn now. Yes, some of the producers who watched the movie on Saturday extended their support to Karthik Subbraj.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil