»   »  இனி யாருக்கும் பிக் பாஸ் பற்றி பேட்டி கொடுக்க மாட்டேன்: காயத்ரி திடீர் முடிவு

இனி யாருக்கும் பிக் பாஸ் பற்றி பேட்டி கொடுக்க மாட்டேன்: காயத்ரி திடீர் முடிவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இனி பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி பேட்டி கொடுக்கப் போவது இல்லை என்று காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது கெட்ட வார்த்தை பேசியதால் காயத்ரி ரகுராமை பார்வையாளர்களுக்கு பிடிக்காமல் போனது. கெட்ட வார்த்தை பேசியதற்காக காயத்ரியை கமல் ஹாஸன் ஏன் கண்டிக்கவில்லை என்று பார்வையாளர்கள் கேட்டனர்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு நிகழ்ச்சி குறித்து பலர் காயத்ரியிடம் பேட்டி எடுத்துள்ளனர்.

காயத்ரி

காயத்ரி

பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து காயத்ரி பல பேட்டிகள் அளித்துள்ளார். ப்ரொமோ வீடியோக்களில் தன்னை கெட்டவள் போன்று காட்டிவிட்டார்கள் என்று கூறி வருத்தப்பட்டுள்ளார்.

முடிவு

இனி பிக் பாஸ் பற்றி பேட்டிகள் அளிக்க மாட்டேன். பிக் பாஸ் போட்டியாளர்கள், விஜய் டிவி குழு, கமல் சாருக்கு நன்றி. பெரிய வெற்றி. கடவுள் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக என்று காயத்ரி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கை

வாழ்க்கைள இப்ப தான் உருப்படியான ஒரு முடிவு எடுத்து இருக்கீங்க... வாழ்த்துகள்..🤳🤳

பார்க்கிறோம்

எங்கேயும் ஓட முடியாது
எங்கேயும் ஒளிய முடியாது

நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்

English summary
Former Bigg Boss contestant Gayathri Raghuram tweeted that, 'No more interviews on BB. Moving on. I'm really thankful to housemates vijay tv team endemol team and Kamal sir. Huge success. Godbless all'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil