twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இனிமே அந்த பிரச்சனையே இருக்காது.. வாரிசு, துணிவு ரெண்டுமே ரெட் ஜெயண்ட் கையில் தான்.. எப்படி?

    |

    சென்னை: அஜித்தின் துணிவு படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் வெளியிட உள்ள நிலையில், விஜய்யின் வாரிசு படத்துக்கு கணிசமான தியேட்டர்கள் கிடைக்காது என சர்ச்சைகள் கிளம்பின.

    ஆனால், வாரிசு படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள செவன் ஸ்க்ரீன் நிறுவனம் தற்போது எந்த எந்த ஏரியாவில் எந்த எந்த விநியோகஸ்தர்கள் வாரிசு படத்தை வெளியிட உள்ளனர் என்கிற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    இதன்மூலம் உதயநிதி ஸ்டாலின் அஜித்தின் துணிவு படத்திற்குத் தான் அதிக தியேட்டர்கள் ஒதுக்குவார் என்கிற பிரச்சனை நிலவாது என்கின்றனர்.

    அந்த விஷயத்தை நொறுக்குனதே அஜித் தான்.. சினிமா ரவுண்ட் டேபிளில் பேசிய ராஜமெளலி.. ரசிகர்கள் ஹாப்பி! அந்த விஷயத்தை நொறுக்குனதே அஜித் தான்.. சினிமா ரவுண்ட் டேபிளில் பேசிய ராஜமெளலி.. ரசிகர்கள் ஹாப்பி!

    செவன் ஸ்க்ரீன் அறிவிப்பு

    செவன் ஸ்க்ரீன் அறிவிப்பு

    அஜித்தின் துணிவு படத்தின் தமிழ்நாடு ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. அதே போல விஜய்யின் வாரிசு படத்தின் வெளியீட்டு உரிமையை செவன் ஸ்க்ரீன் தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்நிலையில், முக்கிய நகரங்களில் வாரிசு படத்தின் உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனமே பெற்றுள்ளது என்கிற அதிரடி அறிவிப்பை செவன் ஸ்க்ரீன் தற்போது வெளியிட்டுள்ளது.

    எல்லாமே வெயிட் கை

    எல்லாமே வெயிட் கை

    வாரிசு படத்தை ஒவ்வொரு ஏரியாவிலும் வெயிட்டான கைகள் வெளியிட உள்ளதாக சூப்பரான அப்டேட்டை கொடுத்து வாரிசு மற்றும் துணிவு தியேட்டர் பிரச்சனைக்கு செவன் ஸ்க்ரீன் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதிலும், குறிப்பாக உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனமும் வாரிசு படத்தை வெளியிடப் போகும் அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

    ரெட் ஜெயண்ட் கையில்

    ரெட் ஜெயண்ட் கையில்

    சென்னை, செங்கல்பட்டு, கோயம்பத்தூர், நார்த் ஆர்காடு, சவுத் ஆர்காடு பகுதிகளில் விஜய்யின் வாரிசு படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. வாரிசு மற்றும் துணிவு என இரு படங்களுக்கும் சரி சமமான திரையரங்குகள் கிடைக்கும் என இதன்மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு வந்த பிறகு விஜய், அஜித் ரசிகர்கள் அடுத்த சர்ச்சையை ஆரம்பித்துள்ளனர்.

    நல்ல படம் ஓடும்

    நல்ல படம் ஓடும்

    விஜய் மற்றும் அஜித் யார் நம்பர் ஒன் என்கிற சர்ச்சை ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், இருவருக்கும் தற்போது சரி சமமான தியேட்டர்கள் கிடைக்கும் என்பது உறுதி ஆகி உள்ள நிலையில், வாரிசு மற்றும் துணிவு என இரு படங்களில் எந்த படத்தின் கதை ரசிகர்களை வெகுவாக ஈர்க்கிறதோ அந்த படம் தான் இந்த பொங்கலுக்கு ஓடும் என பலரும் ட்வீட் போட்டு வருகின்றனர்.

    இரண்டுமே சொதப்புமா

    இரண்டுமே சொதப்புமா

    இந்த ஆண்டு அஜித்தின் வலிமை மற்றும் விஜய்யின் பீஸ்ட் படங்கள் இரண்டுமே வெளியாகின. ஆனால், கமல்ஹாசனின் விக்ரம், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் தான் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தன. 2023ல் ஆவது அஜித், விஜய் படங்கள் ஓடுமா இல்லை மீண்டும் சொதப்புமா? என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன.

    தியேட்டர்களுக்கு கொண்டாட்டம்

    தியேட்டர்களுக்கு கொண்டாட்டம்

    வரும் பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு என இரு பெரிய படங்கள் வெளியாக உள்ள நிலையில், படம் நல்லா இருக்கோ இல்லையோ, வசூல் ரீதியாக பொங்கல் பண்டிகைக்கு தியேட்டர்களில் கொண்டாட்டம் களைகட்டும் என தியேட்டர் உரிமையாளர்கள் முன்கூட்டிய இன்சூரன்ஸ் எல்லாம் செய்து பொங்கல் கிளாஷை எதிர்கொள்ள தயாராகி உள்ளனர்.

    English summary
    No more Screen issues hereafter talks trending after Red Giant Movies bagged Vijay's Varisu top cities release rights. Seven Screen just now officially confirmed the distributors details of Varisu movie. No more Screen issues hereafter talks trending after Red Giant Movies bagged Vijay's Varisu top cities release rights. Seven Screen just now officially confirmed the distributors details of Varisu movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X