twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அடுத்த வாரம் முதல் படங்கள் ரிலீஸ் ஆகாது... தென்னிந்திய திரையுலகம் ஸ்ட்ரைக் அறிவிப்பு!

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    தென்னிந்திய திரையுலகம் ஸ்ட்ரைக் அறிவிப்பு மார்ச் 1-ம் தேதி முதல் | Filmibeat Tamil

    சென்னை : டிஜிட்டல் ஒளிபரப்புக்கான கியூப், யுஎஃப்ஓ கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி தமிழ் சினிமா உள்ளிட்ட தென்னிந்திய சினிமா துறையினர் ஸ்ட்ரைக்கில் ஈடுபட உள்ளனர். இதனால் வருகிற மார்ச் 1-ம் தேதி முதல் புதிய படங்கள் ரிலீஸ் ஆகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஜி.எஸ்.டி வரி, கேளிக்கை வரியால் கணிசமாக உயர்ந்துள்ள தியேட்டர் கட்டணங்கள், படத்தை திரையிடும் கியூப் மற்றும் யுஎப்ஓ கட்டணங்கள் அதிகரிப்பு, பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்த கட்டண உயர்வு, பைரசி தளங்களால் வசூல் குறைவு என பல்வேறு பிரச்னைகளை சினிமா சந்தித்து வருகிறது.
    கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. ஜிஸ்டி வரி, கியூப் கட்டணம் இவற்றோடு தியேட்டர் பார்க்கிங் கட்டணம், மினிமம் கியாரண்டி ரிலீஸ் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    No movies release after march 1

    இதேபோன்று கேரளா, கர்நாடக மாநில திரைப்பட சங்கங்களும் கூடி விவாதித்துள்ளன. அவைகள் தெலுங்கு திரையுலகம் முன்னெடுக்கும் போராட்டத்தில் கலந்து கொள்வதென முடிவு செய்துள்ளன. இதனால் வருகிற மார்ச் 1-ம் தேதியிலிருந்து ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலக ஸ்டிரைக் நடக்க இருக்கிறது.

    இந்நிலையில், பெங்களூரில் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகிஸ்தர்கள் கியூப் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதிகமாக, வசூலிக்கப்படும் கட்டணத்தை குறைக்குமாறு கோரியுள்ளனர். ஆனால்,இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இதையடுத்து, கியூப் மற்றும் யு எஃப் ஓ முதலான சிஸ்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் மார்ச் 1-ம் தேதி முதல் புதிய படங்களை ரிலீஸ் செய்யமாட்டோம் என்று தயாரிப்பாளர் சங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

    இதையடுத்து, கியூப் மற்றும் யு எஃப் ஓ முதலான சிஸ்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் மார்ச் 1-ம் தேதி முதல் புதிய படங்களை ரிலீஸ் செய்யமாட்டோம் என்று தயாரிப்பாளர் சங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

    English summary
    Today, in Bangalore, South Indian producers, theater owners, distributors and Qube company were engaged with negotiation. But this negotiation has failed. According to the Producers council announcement, the new films will not be released on March 1.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X