»   »  படத்தில் தேசிய கீதம் வந்தால் எழுந்து நிற்க வேண்டாம்: உச்ச நீதிமன்றம்

படத்தில் தேசிய கீதம் வந்தால் எழுந்து நிற்க வேண்டாம்: உச்ச நீதிமன்றம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
டெல்லி: படத்தில் தேசிய கீதம் இசைக்கும் காட்சி வந்தால் எழுந்து நிற்க வேண்டாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாட்டில் உள்ள திரையரங்குகளில் படம் துவங்குவதற்கு முன்பு தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது.

No need to stand up for national anthem if it part of film: SC

தேசிய கீதம் இசைக்கப்படும்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆமீர் கானின் தங்கல் படத்தில் தேசிய கீதம் இசைக்கும் காட்சி வந்தபோது எழுந்து நிற்காதவர்கள் தாக்கப்பட்டனர்.

இதையடுத்து உச்ச நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது,

படம் துவங்குவதற்கு முன்பு திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படும் போது பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும். ஆனால் பட காட்சியில் அல்லது விளம்பரங்களில் தேசிய கீதம் இசைக்கப்பட்டால் எழுந்து நின்று மரியாதை செய்யத் தேவையைில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Supreme court has said on tuesday that there is no need to stand up for the national anthem in cinema halls if it is part of the film.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil