»   »  தமிழ் சினிமாவில் முதல் முறையாக தமிழ்ப் புத்தாண்டுக்கு புதுப்படமில்லை!

தமிழ் சினிமாவில் முதல் முறையாக தமிழ்ப் புத்தாண்டுக்கு புதுப்படமில்லை!

Posted By:
Subscribe to Oneindia Tamil
தொடரும் சினிமா ஸ்ட்ரைக் - புத்தாண்டுக்கு புது படம் கிடையாது!

சென்னை: தமிழ் சினிமாவின் மிகப் பெரிய வசூல் சீஸன் கோடை வி்டுமுறை மற்றும் தமிழ்ப் புத்தாண்டு தினமான சித்திரை 1.

ஆனால் இந்த ஆண்டு இந்த கோடையும் சரி, தமிழ்ப் புத்தாண்டும் சரி, எந்த புதுப்பட ரிலீசும் இல்லாமல் கடக்கவிருக்கின்றன.

No new release to Tamil New Year

தமிழ் சினிமாவில் கடந்த மார்ச் 1-ம் தேதி டிஜிட்டல் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட வேலை நிறுத்தம், திரையுலகில் நிலவி வரும் ஒட்டு மொத்த முறைகேடுகளையும் களைவதற்கான போராட்டமாக மாறியது. குறிப்பாக திரையரங்குகளில் நிலவும் அதிகக் கட்டணம், பார்க்கிங், திண்பண்ட விலைக் கொள்ளை போன்றவற்றை முறைப்படுத்தக் கோரி ஸ்ட்ரைக்கில் பிடிவாதமாக உள்ளது தயாரிப்பாளர் சங்கம்.

இதனால் வரும் தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ம் தேதி தமிழகத்தில் எந்தப் புதிய படமும் வெளியாகாது என்பது உறுதியாகிவிட்டது. அன்றைய தினம் வெளியாகவிருந்த மெர்க்குரி படமும் தள்ளிப் போடப்பட்டது.

இப்போது ரசிகர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் பெரிதும் எதிர்ப்பார்ப்பது ரஜினியின் காலா படத்தை. அந்தப் படமாவது அறிவித்தபடி ஏப்ரல் 27-ம் தேதி வெளியாகுமா?

English summary
For the first time in Tamil cinema, there will not be any new releases for Tamil Puthandu this year.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X