»   »  சினிமா ஸ்ட்ரைக்... இன்னிக்கு நோ புதுப்படம்... வெறிச்சோடிய தியேட்டர்கள்!

சினிமா ஸ்ட்ரைக்... இன்னிக்கு நோ புதுப்படம்... வெறிச்சோடிய தியேட்டர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
தென்னிந்திய திரையுலகம் ஸ்ட்ரைக் அறிவிப்பு மார்ச் 1-ம் தேதி முதல் | Filmibeat Tamil

சென்னை: தயாரிப்பாளர்கள் சங்கம் இன்று அறிவித்துள்ள ஸ்ட்ரைக் காரணமாக தமிழ், தெலுங்கில் எந்தப் புதிய படங்களும் இந்த வெள்ளிக்கிழமை வெளியாகவில்லை. இதனால் பெரும்பாலான திரையரங்குகளில் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடின.

க்யூப், யுஎஃப்ஓ உள்ளிட்ட டிஜிட்டல் சேவை அளிப்பவர்கள் உடன் இதுவரை நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதுவரை தயாரிப்பாளர்கள் செலுத்தி வந்த VPF கட்டணத்தினை இனி செலுத்துவது இல்லை என்றும், இனி handling Charges மட்டுமே செலுத்துவது முடிவெடுக்கப்பட்டது.

No new releases today due to Cinema strike

திரையரங்குகளில் திரையரங்கு உரிமையாளர்களே Projector and Server சொந்தமாக வைத்துகொள்ள வேண்டும். அந்த திரையரங்குகளில் மட்டுமே திரைப்படங்களை வெளியிடுவது என்று முடிவெடுக்கப்பட்டது. தயாரிப்பாளர்களின் இந்தக் கோரிக்கைக்கு திரைப்பட அமைப்புகள் பலவும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதேபோல, தெலுங்கு சினிமாவும் ஸ்ட்ரைக்கை அறிவித்துள்ளது. இதனால் இந்த வெள்ளியன்று தமிழ் மற்றும் தெலுங்கில் எந்த புதுப் படமும் வெளியாகவில்லை.

இன்றைய சூழலில் புதிய படங்கள் வெளியாகும் வெள்ளி மற்றும் வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறுகளில்தான் திரையரங்குகளுக்கு அதிகமாக மக்கள் வருகிறார்கள். இப்போது புதிய படங்கள் வெளியிடுவது நிறுத்தப்பட்டுள்ளதால் தியேட்டர்களுக்கு கூட்டம் வருவதே குறைந்துவிட்டது. இதனால் இந்த வாரத்தில் மட்டும் ரூ 20 கோடி வரை இழப்பு ஏற்படும் என்கிறார்கள்.

20 படங்கள், இரண்டு வாரங்களில்

கடந்த 2 வாரங்களில் மட்டும் 20 சிறிய மற்றும் நடுத்தரப் படங்கள் தமிழில் வெளியாகின. ஆனால் இவற்றில் சொல்லிக் கொள்கிற மாதிரி இருந்த படம் நாச்சியார் மட்டுமே. 6 அத்தியாயம், கேணி போன்றவை ஓரளவு பாராட்டுப் பெற்றாலும், இவற்றுக்கு மக்கள் கூட்டம் சொல்லிக் கொள்கிற மாதிரி வரவில்லை. இப்போது கலகலப்பு 2 படம் ஓரளவுக்கு கூட்டத்துடன் ஓடுகிறது.

மற்ற படங்களை திரையரங்குகள் தூக்காவிட்டாலும், கூட்டம் இல்லாத காரணம் காட்டி காட்சிகளை ரத்து செய்வது தொடர்கிறது. இந்த ஸ்ட்ரைக் இன்னும் எத்தனை நாள் நீடிக்கும் என்பது தெரியவில்லை. ஆனால் அடுத்த வெள்ளிக்குள் முடிந்துவிட வேண்டும் என்பது தியேட்டர்காரர்களின் விருப்பமாக உள்ளது.

English summary
Due to the Film Industry strike, there is no new film release today in Tamil and Telugu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil