»   »  கபாலி பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது - வெங்கட் பிரபு !

கபாலி பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது - வெங்கட் பிரபு !

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினியின் கபாலி படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது. இதையொட்டி கபாலியின் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டை யாராலும் தடுக்க முடியாது என இயக்குநர் வெங்கட் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே நாளை ரிலீசாகிறது ரஜினியின் கபாலி. ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடித்துள்ளார். படம் ரிலீஸ் தேதி அறிவித்த நாள் முதலே கபாலியை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர் ரஜினி ரசிகர்கள். கபாலி படத்தின் எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தை தொட்டுள்ளது.

No one can stop kapali's success - venkat peabhu

இப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், படத்தின் 2 நிமிட இண்ட்ரோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் ரஜினி மலேசிய சிறையிலிருந்து வெளியே வரும் காட்சி உள்ளது. வெளியே வந்தவுடன் அவரிடம் 30 அப்பாவி தமிழர்கள் என்கவுண்டரில் சுடப்பட்ட செய்தியை சொல்கின்றனர்.

இந்த காட்சி தற்போது வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது. இந்த காட்சியில் எவ்வித ரசிகர்களின் சத்தமும் இல்லை, யாருக்கோ திரையிடப்பட்ட ப்ரிவியூ காட்சி தான் என்று கூறப்படுகிறது. இதை பகிர வேண்டாம் என படக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கபாலி வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என இயக்குநர் வெங்கட் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் யார் எதை வெளியிட்டாலும், யாராலும் கபாலியின் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டை தடுக்க முடியாது என கூறியுள்ளார்.

English summary
No one can stop the earth shattering mind blowing weekend box office! #kabalida - venkat peabhu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil