»   »  'ரஜினி-ஷங்கரின் 2.ஓ படத்தில் நடிக்கவில்லை'.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரம்யா கிருஷ்ணன்!

'ரஜினி-ஷங்கரின் 2.ஓ படத்தில் நடிக்கவில்லை'.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரம்யா கிருஷ்ணன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினியின் '2.ஓ' படத்தில் நடிக்குமாறு இதுவரை யாரும் தன்னை அணுகவில்லை என்று நடிகை ரம்யா கிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

ரம்யா கிருஷ்ணன் தற்போது 'சபாஷ் நாயுடு' மற்றும் 'பாகுபலி 2' படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.இந்நிலையில் ரஜினி-ஷங்கரின் '2.ஓ' படத்தில் அவர் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின.

ஏற்கனவே இருவரும் இணைந்து நடித்த 'படையப்பா' மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன், ரஜினிக்கு இணையாக ரம்யாகிருஷ்ணனின் நடிப்பும் பெரிதளவில் பேசப்பட்டது.

நீலாம்பரி

நீலாம்பரி

'படையப்பா' படத்துக்குப் பின் ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு பாராட்டப்பட்டது 'பாகுபலி'யில் தான் என்றாலும், 'படையப்பா' நீலாம்பரி ஏற்படுத்திய அதிர்வை 'பாகுபலி' சிவகாமியால் கொடுக்க முடியவில்லை.

2.ஓ

2.ஓ

இந்நிலையில் ரஜினி-ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் '2.ஓ' படத்தில் ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடிக்கப் போகிறார் எனத் தகவல்கள் வெளியாகின.இது ரஜினி-ரம்யா கிருஷ்ணன் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

ரஜினி-ஷங்கர்

ரஜினி-ஷங்கர்

ஆனால் இப்படத்தில் நடிப்பது குறித்து வெளியான தகவல்களை ரம்யா கிருஷ்ணன் மறுத்திருக்கிறார்.இதுகுறித்து அவர் '' ரஜினியின் 2.ஓ படத்தில் நடிக்க எனக்கும் விருப்பம் தான். ஆனால் இப்படத்தில் நடிக்க இதுவரை யாரும் என்னை அணுகவில்லை என்பதுதான் உண்மை.

வதந்தி

வதந்தி

யார் இதுபோன்ற வதந்திகளை வெளியிடுகிறார்கள் எனத் தெரியவில்லை. ஷங்கர் சார் படத்தில் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தால், யாராவது தவற விடுவார்களா? என்று கேட்டிருக்கிறார்.

சமந்தா

சமந்தா

ரம்யா கிருஷ்ணன் அடுத்ததாக கணவர் வம்சி இயக்கும் 'ருத்ராக்ஷா' படத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் ரம்யாவுடன் இணைந்து சமந்தா நடிக்கப் போவதாக கூறப்பட்டது.ஆனால் திருமண ஏற்பாடுகளால் சமந்தா இப்படத்தில் நடிப்பது சந்தேகம் தான் என்று டோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

English summary
Actress Ramya Krishnan Denies all Rumors About 2.0.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil