»   »  இங்கு தாமரை முளைக்காது... என் தலைமுறைக்கு பிறகு தமிழ் ஈழம் மலரும்! - கவிஞர் முத்துலிங்கம்

இங்கு தாமரை முளைக்காது... என் தலைமுறைக்கு பிறகு தமிழ் ஈழம் மலரும்! - கவிஞர் முத்துலிங்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கவிஞர்களில் எளிமையானவர்... ஆனால் மனதில் பட்டதை சம்பந்தப்பட்டவருக்கு முன்னாலேயே கூட பளிச்சென்று சொல்லிவிடும் குணம் கொண்டவர் கவிஞர் முத்துலிங்கம்.

திராவிடம், தமிழ், தமிழ் ஈழம் போன்றவற்றில் அவரது நிலைப்பாடு எம்ஜிஆர் காலத்திலிருந்து மாறியதே இல்லை.


No place for BJP in Tamil Nadu - Poet Muthulingam

அண்மையில் சென்னையில் ஒரு புத்தக வெளியீட்டு விழா நடந்தது. அதில் பாஜக எம்பியும் மூத்த தலைவருமான இல கணேசன் கலந்து கொண்டார்.


விழாவில் பங்கேற்ற கவிஞர் முத்துலிங்கம் இப்படிப் பேசி முடித்தார்:


ஈழ தமிழர்களுக்கு இன்றுவரை இருக்கும் எந்த மத்திய அரசுகளும் உதவவில்லை. இப்போதுள்ள பா.ஜ.க உட்பட.


No place for BJP in Tamil Nadu - Poet Muthulingam

தமிழகத்தில் திராவிட கட்சிகளைக் கொண்டு நீங்கள் காலுன்ற முடியாது ஒரு போதும். இந்த மண்ணில் தாமரை முளைக்காது. இல.கணேசன் முன்னிலையிலேயே இதைச் சொல்கிறேன்.


எனக்கு நம்பிக்கை இருக்கிறது... இப்போது இல்லாவிட்டாலும் என் தலைமுறைக்கு பிறகு தமிழ் ஈழம் மலரும்," என்றார்.

English summary
Poet Muthulingam says that BJP would never win in Tamil Nadu politics.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil