»   »  நடிகர் சங்கத்தில் ஊழலுக்கு இடமில்லை!- விஷால்

நடிகர் சங்கத்தில் ஊழலுக்கு இடமில்லை!- விஷால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் சங்கத்தில் ஊழலுக்கு இடமில்லை. இனி சங்கத்தின் வரவு,செலவு உள்ளிட்ட கணக்கு விவரங்கள் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிடப்படும் என்றும் நடிகர் விஷால் தெரிவித்தார்.

தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு பொருள் வழங்கும் நிகழ்வு, சென்னை தியாகராயர் நகரில் உள்ள அச்சங்க வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

No place for corruption in Nadigar Sangam, says Vishal

சங்கத்தின் தலைவர் நாசர், செயலாளர் விஷால், துணைத் தலைவர்கள் கருணாஸ், பொன்வண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள், சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசுப் பொருளை வழங்கினர்.

விழாவில் விஷால் பேசுகையில், "நடிகர் சங்கத்துக்குத் தேர்தல் நடைபெற்று ஒரு ஆண்டு கடந்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சங்க உறுப்பினர்களுக்குப் பரிசு பொருள் வழங்கப்படுகிறது. சென்னையில் உள்ள உறுப்பினர்களுக்கு நேரடியாக பரிசு பொருள் வழங்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் உள்ள உறுப்பினர்களுக்கு பரிசு பொருள் அனுப்பப்பட்டுள்ளது. சுமார் 3 ஆயிரம் உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்பட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டுகள்

எங்களது நிர்வாகத்தின் மீது பலவித ஊழல் புகார்கள் எழுந்துள்ளன. அதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில், சங்கத்தின் கணக்கு வழக்குகள் சங்கத்துக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது. நடிகர் சங்கத்தில் துளி அளவு கூட ஊழலுக்கு இடமில்லை. ஊழல் இல்லாமல் செயல்பட இந்த நேரத்தில் உறுதி ஏற்கிறோம். ஏற்கெனவே இருந்த நிர்வாகத்தின் ஊழல் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

எங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த உறுப்பினர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறோம். எந்தெந்த சூழல்களில் சங்க உறுப்பினர்களோடு நாங்கள் தொடர்பு வைத்துள்ளோம் என்பதற்கு இந்த விழா ஒரு சான்று.

நடிகர் சங்கத்துக்கான புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சி.எம்.டி.ஏ.வின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். அடுத்த ஆண்டு ஜனவரியில் அடிக்கல் நாட்டப்பட்டு வேலைகள் தொடங்கும். இதற்கான அதிகாரப்பூர்வு முடிவு நவம்பரில் நடக்கவுள்ள பொதுக்குழுவில் அறிவிக்கப்படும்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் பூரண நலத்துடன் திரும்ப வேண்டி இந்த நேரத்தில் பிரார்த்திக்கிறோம்.

சிவகார்த்திகேயன் கொடுத்த புகார் குறித்து ஆலோசித்து வருகிறோம். இந்த மாதிரியான புகார்கள் இனி தொடராமல் நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.

English summary
Actor Vishal, the general secretary of Nadigar Sangam says that here after the income and expenditure details of the association would be released in official website.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil