»   »  ரஜினி படத் தலைப்பை ஆர்யா படத்துக்கு வைக்கவில்லை- பட நிறுவனம் அறிவிப்பு!

ரஜினி படத் தலைப்பை ஆர்யா படத்துக்கு வைக்கவில்லை- பட நிறுவனம் அறிவிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆர்யா நடிக்கும் புதிய படத்துக்கு ரஜினி படத் தலைப்பு சூட்டப்படவில்லை என்று சூப்பர் குட் நிறுவனம் அறிவித்துள்ளது.

ரஜினி நடிப்பில் கடந்த 1982-ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘தனிக்காட்டு ராஜா'. இந்தத் தலைப்பை ஆர்யாவின் படத்துக்கு சூட்டப் போவதாக செய்திகள் வெளியாகின.

ஆர்யா, கேதரின் தெசரா நடிக்கும் புதிய படத்தை ‘மஞ்சப்பை' படத்தை இயக்கிய ராகவன் இயக்குகிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இந்த நிறுவனம் தயாரிக்கும் 88 வது படம் இது.

No Rajini title for Arya movie

இப்படத்திற்கு ‘தனிக்காட்டு ராஜா' என்ற ரஜினி படத் தலைப்பை தேர்வு செய்துள்ளதாக வெளிவந்த தகவலையடுத்து, இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம், இன்னும் படத்திற்கு தலைப்பு தேர்வு செய்யப்படவில்லை. தனிக்காட்டு ராஜா என்ற தேர்வு செய்ததாக வெளிவந்த தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்தி என்று விளக்கம் அளித்துள்ளது.

வரும் 10-ம் தேதி படப்பிடிப்பு திண்டுக்கல் அருகே உள்ள தாண்டிக்குடியில் தொடங்குகிறதாம்.

English summary
Supergood films denied reports on their forthcoming movie with Arya has been titled as Thanikkattu Raja.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil