»   »  திருமணத்தை நிறுத்தியதில் வருத்தம் இல்லை, நிம்மதியே: பாடகி வைக்கம் விஜயலட்சுமி

திருமணத்தை நிறுத்தியதில் வருத்தம் இல்லை, நிம்மதியே: பாடகி வைக்கம் விஜயலட்சுமி

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: இசை பணியை தொடர திருமணத்தை நிறுத்தியதில் வருத்தம் இல்லை மாறாக நிம்மதியாக இருப்பதாக பாடகி வைக்கம் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கும், கேரளாவை சேர்ந்த இசையமைப்பாளர் சந்தோஷுக்கும் இந்த மாதம் திருமணம் நடப்பதாக இருந்தது. இந்நிலையில் விஜயலட்சுமி திருமணத்தை நிறுத்திவிட்டார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

கன்டிஷன்

கன்டிஷன்

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து பாடலாம் என்றார் சந்தோஷ். ஆனால் நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு பாடுவதை நிறுத்திவிட்டு இசை பள்ளியில் ஆசிரியையாகுமாறு கூறினார்.

வாய்ப்பு

வாய்ப்பு

உனக்கு பாட எத்தனை காலம் வாய்ப்பு வரும். இசை பள்ளியில் சேர்ந்துவிட்டால் ஓய்வு பெற்ற பிறகு பென்ஷன் வரும் என்று சந்தோஷ் கூறினார். இது எனக்கு பிடிக்கவில்லை.

வீடு

வீடு

எனக்கு பெற்றோர் இல்லாததால் திருமணமத்திற்கு பிறகு உங்கள் மகனாக உங்களின் வீட்டிலேயே இருக்கிறேன் என்று சந்தோஷ் எனது தந்தையிடம் தெரிவித்தார். ஆனால் தற்போது என்னை அவர் வீட்டில் வந்து வசிக்குமாறு கூறினார். திருமணத்திற்கு பிறகு அவர் வீட்டிற்கு செல்வதில் ஒன்றும் இல்லை. என் பார்வை பிரச்சனையால் பழகிய என் வீடாக இருந்தால் சவுகரியமாக இருக்குமே என்று பார்த்தேன்.

திருமணம்

திருமணம்

சந்தோஷ் போட்ட இரண்டு கன்டிஷன்களால் மன உளைச்சலுக்கு ஆளானேன். இசையா, திருமணமா என்றபோது இசை தான் என முடிவு செய்து திருமணத்தை நான் தான் நிறுத்தினேன்.

முடிவு

முடிவு

திருமணத்தை நிறுத்திய என் முடிவை என் பெற்றோர் ஆதரித்தனர். தற்போது தான் நிம்மதியாக உள்ளது. நான் தொடர்ந்து இசைப் பணி செய்வேன். தொலை தூரக் கல்வி மூலம் இசையில் முதுகலைப் படிப்பு படித்து வருகிறேன் என்றார் வைக்கம் விஜயலட்சுமி.

English summary
Singer Vaikom Vijayalakshmi said that she has called off her wedding with music director Santhosh as music is her life.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil