twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய்யோட பள்ளிச் சான்றில் மதப் பெயரே கிடையாது! - அடித்துச் சொல்லும் எஸ்ஏசி

    By Shankar
    |

    பெரியகுளம்: நடிகர் விஜய்யின் பள்ளிச் சான்றிதழில் அவரது மதம் என்னவென்றே நாங்கள் குறிப்பிடவில்லை, என்று அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகன் தெரிவித்தார்.

    தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை தவ்ஹீத் பள்ளிவாசலில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    நோன்பு

    நோன்பு

    நோன்பு திறந்து வைத்து அவர் பேசியது, "நான் இங்கு இயக்குநராக வரவில்லை. உங்களது உறவினராக இங்கு வந்து கலந்து கொண்டுள்ளேன். இஸ்லாத்தில் எனக்கு பிடித்தது 5 முறை தொழுகை செய்வதுதான்.

    இஸ்லாமிய சகோதரன்

    இஸ்லாமிய சகோதரன்

    எனது முதல் படமான 'அவள் ஒரு பச்சைக்குழந்தை' என்ற படத்திற்கு 1978-ம் ஆண்டே ஒரு இஸ்லாமிய சகோதரர்தான் ரூ.1 லட்சம் பணம் கொடுத்து உதவினார். அன்று கொடுத்த 1 லட்சம் பணம் தற்போது ரூ.10 கோடிக்குச் சமமாகும்.

    விஜய் பள்ளிச் சான்றில்

    விஜய் பள்ளிச் சான்றில்

    விஜய்யை பள்ளியில் எல்.கே.ஜி.யில் சேர்த்தபோது சான்றிதழில் மதம் என்ற இடத்தில் இந்தியன் என்று குறிப்பிட்டேன். தற்போதும் விஜய் சான்றிதழில் இந்தியன் என்றுதான் இருக்கும்.

    ரசிகர் மன்றத்தில் இஸ்லாமிய பொறுப்பாளர்கள்

    ரசிகர் மன்றத்தில் இஸ்லாமிய பொறுப்பாளர்கள்

    தமிழகத்தில் உள்ள 33 மாவட்டங்களில், குறிப்பாக 6 மாவட்டங்களில் இஸ்லாமிய சகோதரர்கள் தான் விஜய் ரசிகர் மன்ற தலைவராக உள்ளனர்," என்றார்.

    ஜோசப் விஜய்

    ஜோசப் விஜய்

    பள்ளிச் சான்றிதழில் தன் மகனுக்கு இன்ன மதம் என்று குறிப்பிடவே இல்லை என்று இப்போது எஸ் ஏ சந்திரசேகரன் சொல்கிறார். ஆனால் சமீப காலமாக தனது லெட்டர் பேடில் நடிகர் விஜய் என்று இருந்ததை மாற்றி, ஜோசப் விஜய் என்று அச்சடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actor Vijay's father S A Chandrasekaran says that he was not mentioned Vijay's religion in his school certificates.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X